ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா : எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜகவிற்கு இடம் கொடுத்துவிட கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். மேலும் ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு எதிராக ஒன்றிய … Read more

5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு: அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் விற்பனையில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

நாகர்கோவில்: அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக அம்மா சிமென்ட் திட்டம் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டது. தமிழக அரசு மாதம் 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்தது. பல்வேறு சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.185க்கு கொள்முதல் செய்யப்பட்டு அவை அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு பை ரூ.190க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வீடுகளை நிர்மாணிப்பதில் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்க 100 சதுர … Read more

சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்குவங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின் உயிரிழப்பு தொடர்பாக வேளச்சேரி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி..!!

டெல்லி: டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிய 6 பேர் கொசு விரட்டி மருந்தை சுவாசித்ததால் உயிரிழந்தனர். கொசு விரட்டியை எரித்ததில் வெளியான கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

சங்கரன்கோவிலில் 2 ரூபாய்க்கு இட்லி வடை விற்கும் தம்பதி

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7ம் தெருவைச் சேர்ந்த தம்பதியர் முருகன், செல்வி. இவர்கள் சங்கரன்கோவிலில் கடந்த 45 வருடமாக இட்லி கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் தற்போது இட்லி, வடை 2 ரூபாய்க்கும். டீ, முறுக்கு, அதிரசம் 5 ரூபாய்க்கும், பொங்கல் 10 ரூபாய்க்கும் நல்ல தரத்துடன் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கடை வைத்திருக்கும் பகுதி நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள் நிறைந்தது. தொழிலாளர்களின் பசியை போக்கும் வகையில் மிகக்குறைந்த விலையில் ஒரு சேவையாக இந்த … Read more

தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி 65 லட்சம் மோசடி: 3 பேர் கைது

தேனி: தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி பிரியதர்ஷினி என்பவரிடம் ரூ. 65 லட்சம் மோசடி செய்த 3 பேரை கைது செய்துள்ளனர். மோசடி செய்த புகாரில் ஜோதிடர் சந்திரசேகரன், அவரது மனைவி விஜி, ஆனந்தன் ஆகியோர் கைது செய்துள்ளனர்

மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

புதுச்சேரி: மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி நபர் தீர்மானம் அரசின் தீர்மானமாக ஏற்று  நிறைவேற்றப்பட்டது. திமுக உறுப்பினர்கள் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்துக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: இன்றிரவு அஜபா நடனத்துடன் தேருக்கு எழுந்தருளும் சுவாமி

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழ்கிறது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 48 நாட்கள் நடைபெறும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர விழா பந்தல்கால் முகூர்த்தம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.  கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் … Read more

சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் உதவி பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் உதவி பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹரி பத்மன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது லோக்ஆயுக்தா

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கை லோக்ஆயுக்தா 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது. முதல்வர் நிவாரண நிதியை தவறாக கையாண்டதாக பினராயி விஜயனுக்கு எதிராக லோக்ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.