தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களின் தற்போதைய நிலை என்ன?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களின் தற்போதைய நிலை என்ன? அதை பயன்படுத்த செயல் திட்டம் ஏதும் உள்ளதா? என தமிழ்நாடு அரசின் நில நிர்வாகம் ஆணையர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு புறம் போக்கு நிலம் அதிகளவில் இருக்கும் போது நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்து அரசு கட்டிடங்கள் கட்டப்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

29 மாவட்டங்களில் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்களை விற்கும் பூமாலை வளாகங்கள் ரூ.6.16 கோடியில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: 29 மாவட்டங்களில் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்களை விற்கும் பூமாலை வளாகங்கள் ரூ.6.16 கோடியில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலுரை அளித்தார். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்கை அடைய ரூ.20 கோடியில் பயிற்சி அளிக்கப்படும். 2 ஆண்டுகளில் ஊரக, நகர்ப்புறங்களில் 70,800 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.37 கோடியில் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு சார்பில் விழா நடத்தப்படும்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு புதுச்சேரி அரசு சார்பில் விழா நடத்தப்படும். அரசு ஊதியம் பெற்று கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டோருக்கு மீண்டும் வேலை தரப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: ஒன்றிய அரசு உதவியோடும் உறுதுணையோடும் அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுச்சேரியை முன்னேற்றுவோம். பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிறைவான பதில்களை அளித்துள்ளனர். … Read more

கடல் கடந்தும் தமிழர்கள் போர்வெல் போடுகிறார்கள்… இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கும் திருச்செங்கோடு ரிக் இயந்திர வண்டிகள்

* நலிவின் பிடியில் சிக்கியுள்ளதாக குமுறல்* ஒன்றிய அரசின் சலுகைகள் அவசியம் திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் மையம் கொண்டு இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ரிக் இயந்திர வண்டித்தொழில் நலிவின் பிடியில் சிக்கியுள்ளது. இதனை மீட்டெடுக்க ஒன்றிய அரசின் சலுகைககள் அவசியம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். வைத்துள்ளனர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது சான்றோர் வாக்கு. இந்த நீரானது பண்டை காலங்களில் ஆறுகள், குளங்கள், ஏரிகள் ேபான்ற பொது நீர்நிலைகளில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டது. … Read more

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்.2-ம் தேதி முதல் ரூ.294 ஊதிய உயர்வு வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்.2-ம் தேதி முதல் ரூ.294 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும். தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து … Read more

தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு

டெல்லி: தயிர் பால் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என அச்சிட வலியுறுத்திய அறிக்கையை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றது. அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது தஹி என இந்தியில் எழுத ஒன்றிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியது.ஆங்கிலத்தில் curd என எழுதி அதன் கீழ் தஹி என எழுதுமாறும், வேண்டுமானாலும் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தன. … Read more

ஓசூர் அருகே மாந்தோப்பில் 5 யானைகள் முகாம்; பொதுமக்கள் பீதி

ஓசூர்: ஓசூர் அருகே கிராம பகுதியில் உள்ள மாந்தோப்பில் 5 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட யானைகள் அவ்வப்போது வருவதும், மீண்டும் வனத்துறையினரால் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்படுவது என வழக்கமாக உள்ளது. கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி வழியாக, ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராம பகுதிக்கு, 5 யானைகள் நேற்று வந்தன. இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் … Read more

பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது இதைதான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும். அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்திருந்தார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து!

ஆந்திர: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்களை கோயிலை விட்டு வெளியேற்றி, தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே கண்ணப்பன் தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் வீட்டில் இருந்து 150 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி, ஐந்தரை லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் ஓரிக்கை … Read more