இந்திய தேசியக்கொடி அவமதிப்பு… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் மந்திரி

மாலே, இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் சர்ச்சையில் சிக்கியவர் மாலத்தீவு முன்னாள் மந்திரி மரியம் ஷியுனா. தற்போது இரண்டாவது முறையாக மரியம் ஷியுனா சர்ச்சையில் சிக்கி உள்ளார். மாலத்தீவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முன்னாள் மந்திரி மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றாக ‘மிகப்பெரும் பின்னடைவை … Read more

பா.ஜனதாவில் இருந்து விலகினார் பிரேந்தர் சிங்: இன்று காங்கிரசில் சேருகிறார்

சண்டிகார், முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங், பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவருடைய மனைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரேம லதாவும் பா.ஜனதாவில் இருந்து விலகினார். இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரசில் சேரப்போவதாக பிரேந்தர் சிங் கூறினார். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரேந்தர் சிங், 10 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருடைய மகன் பிரிஜேந்தர் சிங் ஒரு மாதத்துக்கு முன்பு பா.ஜனதாவில் … Read more

ருதுராஜ் கெய்க்வாட் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி

சென்னை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப் சால்ட், துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் … Read more

பாலின மாற்று அறுவை சிகிச்சை மனித கண்ணியத்திற்கு அச்சுறுத்தல்: வாடிகன் அறிவிப்பு

வாடிகன் சிட்டி: பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை ஆகியவை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் அறிவித்துள்ளது. மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட இந்த அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் … Read more

மராட்டியம்: கல்லூரி மாணவி கடத்தி கொலை; சக மாணவர் உள்பட 3 பேர் கைது

புனே, மராட்டியத்தின் புனே நகரை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவி வகோலி பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவருடைய கல்லூரி மற்றும் விடுதிக்கு வந்து பெற்றோர் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இதன்பின் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த மாணவியை பணம் கேட்டு சக மாணவர் உள்பட 3 பேர் கடத்திய விவரம் தெரிய வந்தது. ஆனால், அவரை அந்த கும்பல் தாக்கி … Read more

ஜப்பான் பார்முலா 1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

சுசூகா, பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள சுசூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 307.471 கிலோ மீட்டர் தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியன் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 54 நிமிடம் 23.566 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய … Read more

ஆஸ்திரேலியாவில் கனமழை: அணை உடையும் அபாயம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

கான்பெரா, ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ரிச்மண்ட், வின்ட்சர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக சிட்னி நகரில் ரெயில் தண்டவாளத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்கு ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சிட்னி நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள வாரகம்பா அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே எந்த நேரத்திலும் அணை உடையும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் … Read more

மான்டி கார்லோ டென்னிஸ்: பிரதான சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி

மான்டி கார்லோ, களிமண் தரையில் நடக்கும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் உலக தரவரிசையில் 95-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சுமித் நாகல், 55-வது இடத்தில் இருக்கும் பேகுன்டோ டயஸ் அகோஸ்டாவை (அர்ஜென்டினா) சந்தித்தார். 2 மணி 25 நிமிடம் நீடித்த இந்த மோதலில் சுமித் நாகல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அகோஸ்டாவை வீழ்த்தி … Read more

என் வயது 14 தான்…!! பள்ளி மாணவர்களை பாலியல் வலையில் வீழ்த்திய இளம்பெண்

வாஷிங்டன், அமெரிக்காவில் 23 வயது இளம்பெண் தன்னை 14 வயது சிறுமி என கூறி பள்ளி மாணவர்கள் பலரை பாலியல் விருப்பத்திற்கு பயன்படுத்தி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, அலைசா ஆன் ஜிங்கர் என்ற இளம்பெண் பாலியல் விருப்பத்துடன் டீன் ஏஜ் சிறுவன் ஒருவனை அணுகியுள்ளார். அவனை சந்தித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட விரும்பி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து, தம்பா காவல் துறை ஜிங்கரை கைது செய்துள்ளது. … Read more

கேன்டிடேட் செஸ் போட்டி: ஒரே நாளில் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி

டொரோன்டோ, உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை என்று மொத்தம் 14 சுற்றில் மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள். ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் … Read more