செல்ஃபி பாயின்ட் முதல் குழந்தைகள் விளையாடும் இடம் வரை: மதுரை முன்மாதிரி பூத்களில் அசத்தல்!

மதுரை: செல்ஃபி பாய்ன்ட், குழந்தைகள் விளையாடும் இடம், பாலூட்டும் அறை, வாக்களிக்க வரும் வாக்காளர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற தேர்தல் அலுவலர்கள் என மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முன்மாதிரி வாக்குச்சாவடிகள் வாக்காளர்களை கவர்ந்தது. மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, மத்தி, மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, மத்தி மற்றும் மேலூர் ஆகிய 6 … Read more

“பாஜகவை வீழ்த்த வேண்டுமா..?” – மேற்கு வங்க மக்களிடம் மம்தா புதிய முழக்கம்

கொல்கத்தா: “மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டுமா? அப்படியென்றால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்” என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கடும் பிரயத்தனம் செய்துவந்த நிலையில் 42 மக்களவை தொகுதியிலும் தனித்துப் போட்டியென்று மம்தா ஷாக் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், “மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டுமா? அப்படியென்றால் காங்கிரஸ், … Read more

வீட்டுக்கு வாகனம் அனுப்பி மூதாட்டியை வாக்களிக்க ஏற்பாடு செய்த தேர்தல் ஆணையம் @ மதுரை

மதுரை: வாக்குச்சாவடிக்கு அழைத்து வர ஆட்கள் இல்லாததால் மூதாட்டி ஒருவர், தேர்தல் ஆணையத்துக்கு ஃபோன் செய்து உதவி கேட்டதால், தேர்தல் அதிகாரிகள் துரிதமாக வாகனம் ஏற்பாடு செய்து மூதாட்டியை வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று வாக்குப்பதிவு செய்ய வைத்தனர். வாக்களித்த பிறகு அவரை வீட்டுக்கு பாதுகாப்பாக கொண்டுபோய்விட்டனர். மதுரை மக்களவைத் தேர்தலில் வயது மூத்தோரான மீனாட்சியம்மாள் கோமதிபுரம் கொன்றை வீதியில் வசித்து வருகிறார். இவரால் வாக்குச்சாவடி நேரடியாக வந்து வாக்களிக்க இயலவில்லை. அவரை அழைத்து வர உடன் யாரும் … Read more

“உங்கள் வாக்குகள் பாதுகாப்பாக இருக்கும்” – தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆகவே, மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் சார்ந்து பல்வேறு நடைமுறைகள் இணைந்து இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவிஎம் மீதான சந்தேகங்கள் குறித்த கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் வெள்ளிக்கிழமை பதில் அளித்தார். … Read more

தமிழகத்தில் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு – மக்களவைத் தேர்தல் திருவிழா டாப் 10 ஹைலைட்ஸ்

இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அமைதியான முறையில் நடந்த மக்களவைத் தேர்தலில், இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் … Read more

‘வாக்களித்த அனைவருக்கும் நன்றி’ – முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்து பிரதமர் மோடி ட்வீட்

சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது குறித்து விரிவாக பார்ப்போம். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தி இருந்தனர். ஏழு கட்டங்களாக நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் தொடக்கம் … Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்ததால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் @ ராமநாதபுரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவை தொகுதி கமுதி அருகே வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்து வாக்காளர்கள் மத்தியில் அதிகாரிகள் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. ராமநாதபுரம் மக்களவை தொகுதி கமுதி அருகே கீழவில்லனேந்தல், மேலவில்லனேந்தல் கிராம வாக்காளர்களுக்காக கீழவில்லனேந்தலில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் 1 முதல் 25 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில், 1-வது இயந்திரத்தை இரண்டாவது இடத்திலும், இரண்டாவது இயந்திரத்தை முதலிலும் … Read more

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இரவு 7 மணி வரை 60.03% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைக்கான முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடந்தது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது. தொகுதி பிரேக் அப்: தமிழகம் (39), … Read more

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில் 75.67%, தருமபுரியில் 75.44%, சிதம்பரத்தில் 74.87% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார். சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி … Read more

“சிறையில் நான் சாப்பிட்டதை அரசியல் ஆக்குகிறது அமலாக்கத் துறை” – கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: “சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்று குற்றம்சாட்டியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “நான் உட்கொண்ட உணவு, எனது மருத்துவர் தயாரித்து கொடுத்த டயட் அட்டவணையுடன் ஒத்துப்போகிறது” என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அரவிந்த் கேஜ்ரிவால் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மான் நீதிமன்றத்தில் கூறுகையில், “நான் (அரவிந்த் கேஜ்ரிவால்) ஜாமீன் பெறுவதற்காக எனது ரத்தத்தின் சர்க்கரை அளவினை கூட்ட முயற்சிப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. ஜாமீன் பெறுவதற்காக … Read more