வானிலை முன்னெச்சரிக்கை: மே 3 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை

சென்னை: அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் இருக்காது என்றும், மே 3 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் … Read more

வேட்புமனுவை வாபஸ் பெற்றார் இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜகவில் இணைய அழைப்பு

இந்தூர்: காங்கிரஸ் கட்சியின் இந்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அக்‌ஷய் காண்டி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இவர் இந்தூர் தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி. சங்கர் லால்வானிக்கு எதிராக களமிறக்கப்பட்டிருந்தார். இந்தூரில் வரும் மே 13-ஆம் தேதி மக்களவை 4-ஆம் கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பேரதிர்ச்சியாக வந்துள்ளது. அக்‌ஷய் காண்டி பாம் தனது மனுவை வாபஸ் பெற்றவுடனேயே … Read more

‘ஸ்டராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் பழுதின்றி செயல்பட நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

சென்னை: ‘தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும். ‘ஸ்ட்ராங் ரூம்’ அமைந்துள்ள பகுதிகளில் டிரோன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார். … Read more

“பொய்மையே வெல்லும் என்பதுதான் மோடியின் கொள்கை” – ஜெய்ராம் ரமேஷ் சாடல்

புதுடெல்லி: “பொய்மையே வெல்லும் என்பதுதான் பிரதமர் மோடியின் கொள்கை” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். பிரதமர் மோடி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி விமர்சித்திருந்ததற்கு ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். “பிரதமர் மோடி பொய்களைப் பரப்பி வருகிறார். ஆட்சிப் பீடத்தில் இருந்து வெளியேற உள்ள பிரதமர் மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பற்றி அப்பட்டமான, பொய்யை சற்றும் வெட்கப்படாமல் கூறி வருகிறார். அவர் ஒவ்வொரு முறை … Read more

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு அளிக்க முயன்ற பாஜக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை @ மதுரை

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறி, கஞ்சா பொட்டலத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புகார் மனு அளிக்க முயன்ற மதுரை பாஜக நிர்வாகி சிக்கினார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். மக்களவை தேர்தலுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வெடுக்க திட்டமிட்டார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மதுரைக்கு வந்தார். இதன்பின், 10.20 மணிக்கு கார் மூலம் கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். உடன் அவரது குடும்பத்தினரும் சென்றனர். முதல்வரின் … Read more

“பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை!” – ரேவண்ணா வீடியோ விவகாரத்தில் பாஜகவுக்கு ‘குறி’

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில், கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் தொடங்கி திரிணமூல் காங்கிரஸ் வரை பாஜகவை குறிவைத்துள்ளன. “பிரஜ்வல் ரேவண்ணாவால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளன” என்று காங்கிரஸ் காட்டமாக தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் … Read more

கோடை வெயிலை சமாளிக்க 100 இடங்களில் குடிநீர் தொட்டிகள் @ கோவை

கோவை: கோடை வெயிலை சமாளிக்கவும், மக்களுக்கு குடிநீர் வழங்கவும் மாநகரின் 100 இடங்களில் குடிநீர் தொட்டிகளை கோவை மாநகராட்சி அமைத்துள்ளது. கோவையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில், கோவையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பகல் நேரங்களில் வெளியே செல்வதை முடிந்தவரையில் தவிர்த்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோடை வெயிலை சமாளிக்க தேவையான அறிவுரைகளை மருத்துவத்துறையினர் மூலம் அறிவித்துள்ளனர். … Read more

டெல்லி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்குவதில் தாமதம்: அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க தவறிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை விரைவில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. … Read more

“நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளைப் பெற மோடி முயற்சி” – முத்தரசன் விமர்சனம்

சென்னை: “மூன்றாவது முறையாக பிரதமர் ஆகி விட வேண்டும் என்கிற பேராசையில் நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்று முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைக்கான 18-வது பொதுத் தேர்தல் இரண்டு கட்டங்கள் முடிந்து விட்டன. அடுத்த மூன்றாம் கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ல் முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்து … Read more

அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் சற்றே நிலை தடுமாறியதால் பதற்றம்

பெகுசராய்: பிஹாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர், புறப்படும்போது சற்று நிலை தடுமாறியது. நல்வாய்ப்பாக விபத்து ஏதும் நேரிடவில்லை. பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது பாஜக. மொத்தம் உளள தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும், 16 இடங்களில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியும் மற்ற இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிஹாரின் பெகுசராய் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் … Read more