கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு!

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை நான்காவது இடத்தில்

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பின்னர், 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை நான்காவது (4வது) இடத்தை அடைந்துள்ளது. 2023-2025 போட்டிகளில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அணி, இரண்டில் வெற்றி பெற்று 24 புள்ளிகள் மற்றும் 50 வீத வெற்றி சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே 1, 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன. நேற்று (03) பங்களாதேஷ் அணிக்கு … Read more

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வரலாற்று வெற்றி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கும் இடையில் நடைபெற்ற வு20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட வு20 போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி நேற்று (03) 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்க மகளிர் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததுடன் அவர்கள் தமது 20 … Read more

தற்போதைய வேலைத்திட்டத்தை கடுகளவில் மாற்றினாலும் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும்

வங்குரோத்து அடைந்த நாட்டுக்கு வறுமை புதிதல்ல – அவர்களுக்காகவே ‘அஸ்வெசும’ நிவாரணத் திட்டம் ஆரம்பம். ஒப்பந்ததாரர்களுக்கு 361 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகைகள் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது – போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் வறுமை … Read more

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் … Read more

கொழும்பு வலயத்தின் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு வலயத்திலிருந்தும் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார். கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாடசாலைகள் அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். ஆசிரியர் பற்றாக்குறை,இடநெருக்கடி, வகுப்பறைகள் … Read more

இரண்டாவது டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றி…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்று (03) 192 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 531 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 93 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 59 … Read more

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிப்பு!

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பான் போன்ற விவசாய உபகரணங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கின் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ. ஜே கே முத்துபண்டா உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் கையளிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றது. இதன் போது வவுணதீவு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இவ்வுறுதிப் பத்திரங்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பிரதேச செயலாளர், உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடு திறந்துவைப்பு!!

இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு செவ்வாய்க்கிழமை (02) நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 11 ம் சிங்க ரெஜிமன்ட் படை அணியின் கட்டளை யிடும் அதிகாரி மேஜர் டி .எம் .என். பத்ம சிறீ அவர்களின் மேற்பார்வையில் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இராணுவ வீரர்களின் பங்களிப்பில் 243 வது காலாட் படை அணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே .எம். எஸ். குமாரசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் 24 … Read more