உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை நான்காவது இடத்தில்

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பின்னர், 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை நான்காவது (4வது) இடத்தை அடைந்துள்ளது.

2023-2025 போட்டிகளில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அணி, இரண்டில் வெற்றி பெற்று 24 புள்ளிகள் மற்றும் 50 வீத வெற்றி சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது.

தற்போது இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே 1, 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன.

நேற்று (03) பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.