தமிழக பாஜக வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு: கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை போட்டி

சென்னை: தமிழகத்தில் 9 தொகுதிகளுக் கான பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுடன் 39 தொகுதிகளுக்கான பங்கீடு நேற்றுடன் முடிந்தது. பாமகவுக்கு 10 … Read more

காங்கிரஸின் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டுகாங்கிரஸ் சார்பில் 3-வது வேட்பாளர் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதில் 57 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி புதுச்சேரி தொகுதியில் எம்.பி. வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிர்காம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தெலங்கானாவில் 5 தொகுதிகள், ராஜஸ்தானில் 6 தொகுதிகள்,மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் 15 … Read more

“அமலாக்கத் துறையும், ஐ.டி.யும்தான் பாஜாகவின் அதிகாரபூர்வ கூட்டணி” – முத்தரசன் விமர்சனம்

ராஜபாளையம்: “அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும்தான் பாஜாகவின் அதிகாரபூர்வ கூட்டணி. பாஜகவின் பேச்சைக் கேட்காதவர்களுக்கு எதிராக சோதனை நடத்தப்படுகிறது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியது: “பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். தீர்ப்பை எதிர்த்த முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை … Read more

‘கேஜ்ரிவால் கைது… சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ – பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

மதுரை: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. இந்நிலையில், இது குறித்து எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். “விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜ்ரிவாலுக்கு பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு வரத் தயாராக இல்லை. அதற்கு பல்வேறு காரணங்களைச் சொன்னார். சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என முன்னாள் மத்திய அமைச்சரான அவர் தெரிவித்துள்ளார். … Read more

பாஜக 19, பாமக 10, தமாகா 3, அமமுக 2 – கூட்டணி கட்சி தொகுதிகளின் முழு பட்டியல்

சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் … Read more

‘கேஜ்ரிவால் கைது… தோல்வி பயத்தில் பாஜக!’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். “10 ஆண்டு கால பாசிச பாஜக அரசின் தோல்வி மற்றும் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தோல்வி பயத்தாலும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்துள்ளது மத்திய அரசு. இதற்கு முன்னர் இதே பாணியில் ஹேமந்த் சோரனை கைது செய்திருந்தது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தை … Read more

NDA Alliance: ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டி… பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் எங்கெங்கு போட்டி?

O Panneerselvam, Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் – பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்துடன் போட்டி என அறிவிப்பு

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த பத்தாண்டு காலமாக, பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தந்து வருகிறார். இன்றைய சூழலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராக வந்தால், அனைத்து நிலைகளிலும் இந்திய வளர்ச்சியடைந்த நாடாக மாறும். அதிமுக தொண்டர்களின் உரிமைகளை … Read more

முன்னாள், இந்நாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகரின் வாரிசு போட்டி – ‘விஐபி தொகுதி’ ஆன நீலகிரி!

உதகை: இந்நாள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகரின் மகன் என விஐபி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது நீலகிரி மக்களவைத் தொகுதி. நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் என ஆறு சட்டப்பேரவை தொகுதிககள். இதில், உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் நீலகிரி மாவட்டத்திலும், மேட்டுப்பாளையம் கோவை மாவட்டத்திலும், அவிநாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் ஈரோடு மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ளன. திமுக சார்பில் 2009ம் … Read more

’அசைன்மெண்ட் கோவை’ செந்தில் பாலாஜி இடத்தை கவனிக்க செல்லும் டிஆர்பி ராஜா! ஸ்டாலின் உத்தரவு

Coimbatore District In-charge Minister TRP Raja: அசைன்மென்ட் கோவை இப்போது செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு சென்றிருக்கிறது. இந்த முறை கோவை நாடாளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக.