நடுக்கடலில் அரபிக் குத்து பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட பூஜா ஹெக்டே..வீடியோ உள்ளே..!

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் பீஸ்ட்.
நெல்சன்
இயக்கியுள்ள இப்படத்திற்கு
அனிருத்
இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்திலிருந்து நேற்று அரபிக் குத்து எனும் பாடல் வெளியானது. சிவகார்த்திகேயனின் எழுத்தில் அனிருத்தின் இசையில் கலக்கலாக வெளியான இப்பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடனம் இப்பாடலுக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது. பொதுவாகவே விஜயின் பாடல்களில் அவரது நடனம் தெறிக்கவிடும். அதைப்போலவே இப்பாடலில் அவரது நடனம் அசத்தலாக இருக்கின்றது.

தனுஷ் – ஐஸ்வர்யா போல் பிரியும் மற்றுமொரு நட்சத்திர ஜோடி?..வருத்தத்தில் ரசிகர்கள்.

இருப்பிணும் ஒருசில ரசிகர்கள் என்ன வசனமே புரியவில்லையே என இப்பாடலுக்கு கருத்து தெரிவித்து வரும் நிலையில், பல ரசிகர்கள் வசனமா முக்கியம் பாட்ட கேளுங்க என அவர்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வெளியான பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது. பாடல் வெளியான அரைமணி நேரத்திலேயே பல பாடல்களின் சாதனையை முறியடித்துள்ளது இந்த அரபிக் குத்து பாடல்.

இந்நிலையில் இப்பாடலை பலரும் ரீல்ஸ் செய்து நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடுக்கடலில் ஒரு படகில் அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே அந்த விடியோவை சமூகத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகத்தளங்களில் செம வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மன இறுக்கத்திற்கு பேராறுதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.