மோடியின் ஒரேயொரு உத்தரவு.. 16 பில்லியன் டாலர் நஷ்டம்.. அழுது புலம்பும் #FreeFire..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 14ஆம் தேதி சீனா உடன் தொடர்புடைய 54 ஆண்ட்ராய்டு செயலிகளைத் தடை செய்வதாக அறிவித்தது.

தற்போது தடை செய்யப்பட்ட பெரும்பாலான செயலிகள் 2 வருடத்திற்கு முன்பும் இந்திய மக்களின் தனிநபர் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்ட 100க்கும் அதிகமான செயலிகளின் மாற்று வடிவம் அல்லது பெயரை மாற்றி மீண்டும் இந்தியச் சந்தைக்குள் நுழைந்த சீன செயலிகள் என மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 14ஆம் தேதி தடை செய்யப்பட்ட 54 செயலிகளில் மிகவும் முக்கியமானது ப்பஜி-க்கு இணையாக வளர்ந்து வந்த
கரேனா ஃப்ரீ ஃபயர் செயலி தான். மத்திய அரசு வெளியிட்ட தடை செய்யப்பட்ட 54 செயலிகளில் கடைசியாக இடம்பெற்று இருந்த செயலி இது.

உக்ரைன் பதற்றம் தணிந்ததா? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன?

16 பில்லியன் டாலர் நஷ்டம்

16 பில்லியன் டாலர் நஷ்டம்

சிங்கப்பூர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் Sea நிறுவனம் தான் கரேனா ஃப்ரீ ஃபயர் – அல்டிமேட்டம் செயலியின் உரிமையாளராக உள்ளது. இந்தியாவில் ஃப்ரீ ஃபயர் கேம் தடை செய்யப்பட்ட காரணத்தால் Sea நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஓரே நாளில் 16 பில்லியன் டாலரை இழந்து மோசமான நிலையை அடைந்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள்

இந்திய வாடிக்கையாளர்கள்

Sea நிறுவனத்தின் சரிவு பாதை இந்தியாவின் தடை உத்தரவில் இருந்து தான் துவங்கும் என இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். ஃப்ரீ ஃபயர் செயலிக்கான மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருந்து வரும் காரணத்தால் இந்தத் தடை Sea நிறுவனத்திற்கு மீண்டும் வளர்ச்சி அடைய முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரஸ்ட் லீ: சீனர் - சிங்கப்பூர்
 

பாரஸ்ட் லீ: சீனர் – சிங்கப்பூர்

Sea நிறுவனத்தைப் பாரஸ்ட் லீ என்னும் சீன நாட்டைச் சேர்ந்தவர் உருவாக்கினார். இந்நிறுவனம் ஈகாமர்ஸ், கேமிங்க், நிதியியல் சேவைகள் அளித்து வந்தாலும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள், வர்த்தகத்தைக் கேமிங்க் பிரிவில் இருந்து தான் பெறுகிறது.

டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ்

டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ்

பாரஸ்ட் லீ என்னும் சீன நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், தற்போது அவர் சிங்கப்பூர் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார். இதேவேளையில் பாரஸ்ட் லீ உருவாக்கிய Sea நிறுவனத்தில் மிகப்பெரிய முதலீட்டாளராகச் சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் திகழ்கிறது.

Shopee செயலி

Shopee செயலி

மத்திய அரசு Sea நிறுவனத்தின் கரேனா ஃப்ரீ ஃபயர் – அல்டிமேட்டம் செயலியை தடை செய்த நிலையில், விரைவில் இந்நிறுவனத்தின் Shopee என்னும் மற்றொரு செயலியும் தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Free Fire owned Sea lost $16 Billion after Modi govt app ban

Free Fire owned Sea lost $16 Billion after Modi govt app ban மோடியின் ஒரேயொரு உத்தரவு.. 16 பில்லியன் டாலர் நஷ்டம்.. அழுது புலம்பும் #FreeFire..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.