விஜய் டிவியின் மற்றொரு சீரியலில் என்டரி ஆன நடிகர் : பாரதி கண்ணம்மா அவ்வளவுதானா?

Tamil Serial Update : விஜய் டிவியின் முக்கிய சீரியலிகளில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் 2. மிர்ச்சி செந்தில் இரட்டை வேடங்களில் கலக்கி வரும் இந்த சீரியல் குடும்ப உறவுகளிடையே நடக்கும் சண்டை மற்றும் சச்சரவுகளை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், அடிக்கடி இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.

திருப்பங்கள் பல வந்தாலும், மாயன் மற்றும் மகா இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கூடவே மாயனின் நண்பனாக நடித்த ராஜூ ஜெயமோகனின் கவுண்டர் காமெடிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஆனால் பிக்பாஸ நிகழ்ச்சிக்கு சென்ற ராஜூ இன்னும் சீரியலில் என்ட்ரி ஆகாத நிலையில், அவர் வருவரா அல்லது விலகுவாரா என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்நிலையில், தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு புதிதாக ஒரு நடிகர் என்ட்ரி ஆகியுள்ளார். மாயனின் மாமன் மகன் என்ற கேரக்டரில் அறிமுகமாகியுள்ள அந்த நடிகர் பிரவீன் ராஜ் தேவசகாயம். விஜய் டிவியின் மற்றொரு ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் துர்கா என்ற ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலான இவர், ஏற்கனவே ஈரமான ரோஜாவே சீரியலில், அழகர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவை டார்ச்சர் செய்யும் வெண்பாவுக்கு டார்ச்சர் கொடுக்கும் துர்கா வேடத்தில் நடித்த இவர், அடிக்கடி சீரியலில் இருந்து காணாமல் போய்விடுவார் திடீர் திடீரென தோன்றும் இவர், சமீப எபிசோடுகளாக சீரியலில் இவர் தொடர்பான காட்சிகள் வரவில்லை. இந்த நிலையில் தான் தற்போது பிரவீன்ராஜ் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் என்டரி கொடுத்துள்ளார்.

இது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில்,அந்த ப்ரமோவில், பாண்டி என்ற கேரக்டரில் வருகிறார். ராஜூ இல்லாத குறையை தீர்க்க இந்த சீரியலில் பல நடிகர்கள என்டரி ஆனாலும், ராஜூ இடத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது ராஜூ வருவரா மாட்டாரா என்று தெளிவான தகவல் இல்லாத நிலையில், பிரவீன் ராஜூவின் என்ட்ரி ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.