இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.6% ஆக சரிவு.. ஹரியானா மோசம்.. தெலுங்கான டாப்பு..!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான துறையின் முன்னணி நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய வர்த்தகத்திற்கு இணையான வர்த்தகத்தை பெற துவங்கியுள்ளது.

இதனால் வேலைவாய்ப்பு சந்தையும் தொடர்ந்து மீண்டு வருகிறது, குறிப்பாக வகைப்படுத்தப்படாத துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதன் வாயிலாக நாட்டின் வேலைவாய்பின்மை ஜனவரி மாதத்தில் சரிந்துள்ளது.

4 நாள் மட்டுமே வேலை, அதே சம்பளம்.. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

ஜனவரி மாதம்

ஜனவரி மாதம்

ஜனவரி மாதம் ஒமிக்ரான் தொற்று அதிகமாக இருந்தாலும், அதன் வீரியம் குறைவாக இருந்த காரணத்தால் வர்த்தகத்தில் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இதனாள் வேலைவா்ப்பு இல்லாமல் 66 லட்சம் பேர் மட்டுமே இருக்கும் காரணத்தால் இந்தியாவின் வேவைவாய்ப்பின்மை அளவீடு 6.57 சதவீதமாக சரிந்துள்ளது.

பிப்ரவரி சரிவு

பிப்ரவரி சரிவு

ஜனவரி மாதத்தின் வேலைவாய்ப்பு சந்தையின் வேகத்தை பிப்ரவரி மாதத்தில் தாக்கு பிடிக்க முடியவில்லை, குறிப்பாக பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் உள்ளது. இதனால் பிப்ரவரி மாதத்தின் 16 நாட்களில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

CMIE தரவுகள்
 

CMIE தரவுகள்

CMIE தரவுகள் படி டிசம்பர் மாதம் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 7.9 சதவீதமாத இருந்த நிலையில் ஜனவரி 2022 இல் வேலைவாய்ப்பின்மை விகிதம் 1.3 சதவீத குறைந்து 6.6% ஆக உள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 66 லட்சமாக உயர்ந்துள்ளது. சரி இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் எது தெரியுமா…?

ஹரியானா மோசம்.. தெலுங்கான டாப்பு..!

ஹரியானா மோசம்.. தெலுங்கான டாப்பு..!

ஹரியானா – 23.4 சதவீதம், ராஜஸ்தான் – 18.9 சதவீதம், திரிபுரா – 17.1 சதவீதம், ஜம்மு & காஷ்மீர் – 15 சதவீதம், டெல்லி – 14.1 சதவீதம், ஹிமாச்சல பிரதேசம் – 13.9 சதவீதம், பீகார் – 13.3 சதவீதம், கோவா – 11.6 சதவீதம், பஞ்சாப் – 9 சதவீதம், ஜார்கண்ட் – 8.9 சதவீதம், அசாம் – 8.5 சதவீதம், புதுச்சேரி – 7.8 சதவீதம், மேற்கு வங்காளம் – 6.4 சதவீதம், ஆந்திரப் பிரதேசம் – 6.2 சதவீதம், தமிழ்நாடு – 5.3 சதவீதம், கேரளா – 5 சதவீதம், மகாராஷ்டிரா – 4.2 சதவீதம், உத்தரகாண்ட் – 3.5 சதவீதம், மத்திய பிரதேசம் – 3.2 சதவீதம், சத்தீஸ்கர் – 3 சதவீதம், உத்தரப்பிரதேசம் – 3 சதவீதம், கர்நாடகா – 2.9 சதவீதம், ஒடிசா – 1.8 சதவீதம், மேகாலயா – 1.5 சதவீதம், குஜராத் – 1.2 சதவீதம், தெலுங்கானா – 0.7 சதவீதம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

unemployment rate dip in Jan 2022, but february peaks: CMIE

unemployment rate dip in Jan 2022, but february peaks: CMIE இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.6% ஆக சரிவு.. ஹரியானா மோசம்.. தெலுங்கான டாப்பு..!

Story first published: Thursday, February 17, 2022, 20:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.