பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்களுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன், கடந்த மே மாத இறுதியில் ஒரு மாத பரோலில் வெளியே வந்திருந்ததார். இதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. அப்படி கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டிருந்த பரோல், இப்போது மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மே 28-க்குப் பின் 10-வது முறையாக நீட்டிக்கப்படும் பரோலாகும். 
ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் கழித்து கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஒரு மாத பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். முதல் முறை பரோல் முடிந்து சிறைக்கு செல்லும் நிலையில், அவரது தந்தையின் உடல் நலத்தின் காரணமாக மேலும் முப்பது நாட்கள் அவருக்கு பரோல் விடுப்பு நீட்டிக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் சிறைக்கு சென்றார் பேரறிவாளன்.
அதன்பின்னர் 2019 நவம்பர் மாதம் 12ஆம் தேதி மீண்டும் அவரது உடல் நலம் மற்றும் அவரது சகோதரியின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின் சிறைக்கு சென்ற அவருக்கு, அடுத்தபடியாக அவரது சிறுநீரக நோய் தொற்று சிகிச்சை காரணமாக 2020 அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி மூன்றாவது முறையாக ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது.
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு | Extension of one more  month parole to Perarivalan | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News
இதற்குப் பின்னர் திமுக ஆட்சி அமைந்த பிரகு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தன்னுடைய மகனின் உடல்நிலை சிகிச்சைக்காக 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 28ஆம் ஆம் தேதி ஒரு மாத பரோல் விடுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பரோல் அதன்பின்னர் இன்றுவரை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. அப்படி கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டிருந்த பரோல், நாளையுடன் முடிவுற இருந்த நிலையில் பத்தாவது முறையாக மீண்டும் பேரறிவாளனின் உடல்நல குறைபாட்டின் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய செய்தி: முந்தும் திமுக; பின்தங்கிய அதிமுக: வெளிவரத் தொடங்கியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.