வெளியாக தயாராகும் Apple மேக் கணினிகள்! உள்ளே என்ன சிப் இருக்கு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிடும் நிகழ்வுகள் குறித்து தகவல்கள் கசிந்து வருகிறது. ஆப்பிள் விரும்பிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த நிகழ்வுக்காக காத்திருக்கின்றனர். இந்த புதிய சாதனங்கள் வரும் மார்ச், மே, ஜூன் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய மேக் கணினிகள் குறித்த தகவல்கள் சில கிடைத்துள்ளது. அதன்படி, 13″ அங்குல அளவு திரை கொண்ட மேக்புக் ப்ரோ (MacBook Pro), மேக் மினி (MacBook Mini), 24″ அங்குல ஐமேக், ரீடிசைன் செய்யப்பட்ட மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்ளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கணிகள் M2 சிப்செட் உடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் தனது பிரத்யேக M சீரிஸ் சிப்செட்டை பயன்படுத்தத் தொடங்கி இண்டெல் சிப்செட்டுகளுக்கு விடை கொடுத்தது. தன்னை தனித்துவமாக அனைத்திலும் அடையாளப்படுத்திக் கொள்ள நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

பிரபலங்களுடன் டேட்டிங் செய்ய ஒரு ஸ்பெஷல் ஆப்?

மேலும் பழைய மேக் புக் கணினிகளில் எம் 1 சிப்செட் பொருத்தப்பட உள்ளது. இதுகுறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், ஆப்பிள் தனித்துவமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மேற்கொண்டு வரும் முயற்சிகளால் அது அம்பலப்பட்டுள்ளது.

ஐபோன் 14

அதுமட்டுமில்லாமல், இந்தாண்டு வெளியாகும் iPhone மாடல்கள் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, எல்ஜி நிறுவனத்தின், ஒலெட் திரையை மையமாகக் கொண்ட எல்டிபிஒ (LTPO) தொடுதிரை ஐபோன் 14 ஸ்மார்ட்போனில் இருக்கும் என்று கூறப்பட்டுகிறது. பஞ்ச் ஹோலானது செல்பி கேமராவுடன் திரைக்கு பின்னால் அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) 6.06 அங்குல திரையுடனும், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) 6.7 அங்குல திரையுடனும் எல்ஜி எல்டிபிஒ 120Hz ஹெர்ட்ஸ் ஓலெட் (OLED) பேனல்களைப் கொண்டு இயங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மடிக்கக்கூடிய ஐபோன்

விரைவில் போல்டபிள் ஐபோன் வெளியாகும் எனவும் டிப்ஸ்டர்கள் தகவல் வெளியிட்டு வருகின்றனர். அதில், “ஆப்பிள் நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஐபோனை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. Apple Foldable iPhone-இல் சிம் ஸ்லாட் இல்லாமல், இ-சிம் உடன் களமிறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளனர்.

Asus Rog Phone 5S: இதுவரை எந்த போனிலும் இல்லாத அம்சம்… அதென்ன தெரியுமா!

அதாவது ‘மேக் ரூமர்ஸ்’ தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களிலும் சிம் ஸ்லாட் இருக்காது என்று தெரியவந்துள்ளது. மேலும், அதன் திரை அளவு 7.7″ அங்குலம் வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

Read More:

108MP கேமரா போன்: சுத்தி சுத்தி படம்பிடிக்க சிறந்த கேமரா போன்கள்!முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!

Apple-iPhone-14 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Apple A15 Bionic (5nm)டிஸ்பிளே6.1 inches (15.49 cm)சேமிப்பகம்64 GBகேமரா12 MP + 12 MPபேட்டரி3115 mAhஇந்திய விலை79900ரேம்4 GB, 4 GBமுழு அம்சங்கள்
Apple-iPhone-14Apple iPhone 14 128GB 4GB RAMApple iPhone 14 256GB 4GB RAM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.