இது நீங்க நெனக்கிற மாதிரி போன் இல்ல… வேற லெவல் பெர்பாமன்ஸ் கொடுக்கும் iQOO 9 Pro

Vivo நிறுவனத்தின் கிளை நிறுவனமான iQOO இன்று இந்தியாவில் தனது ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதில் ஐக்யூ 9 குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மேம்பட்ட வகையான பிளாக்‌ஷிப் ப்ரோ மாடலும் இன்றைய அறிமுக நிகழ்வில் இடம்பெற்றது. ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

iQOO 9 Pro ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 5ஜி சிப்செட், 50W வயர்லெஸ் சார்ஜிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட பிஷ் ஐ கேமரா ஆகியவை முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 9 ப்ரோ அம்சங்கள்

iQoo 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78″ அங்குல அளவு கொண்ட 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய 10 Bit அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே HDR10+ ஆதரவையும் பெற்றுள்ளது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸும் இதில் இடம்பெற்றுள்ளது. இதன் ரெசலியூஷன் 3200 x 1440 ஆக உள்ளது.

மேலும், பிளாக்‌ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 5ஜி சிப்செட் கொண்டு இந்த ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. திறன்வாய்ந்த கிராபிக்ஸ் எஞ்சினும் இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Fun Touch OS 12 ஸ்கின் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. கூடுதலாக பெரிய InDispLay FingerPrint Scanner பாதுகாப்பு அம்சம் இதில் உள்ளது.

ஐக்யூ 9 ப்ரோ கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் மூன்று பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முதன்மை கேமராவாக 50 மெகாபிக்சல் Gimbal லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. வீடியோக்களை எந்த சூழலிலும் தெளிவாக படம்பிடிக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. கூடுதலாக 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் Fish Eye கேமரா, 16 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவையும் பின்புற கேமரா அமைப்பில் அடங்கும்.

செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கம் 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஸ்கிரீன் பிளாஷ் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அபெர்ச்சர் f/2.4 ஆக உள்ளது. சிறந்த சுயப்படங்களை எடுக்க இந்த கேமரா உதவுகிறது.

ஐக்யூ 9 ப்ரோ பேட்டரி

iQOO 9 ப்ரோ ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஊக்குவிக்க 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும், 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடம் வழங்கப்பட்டுள்ளது. 8ஜிபி, 12ஜிபி ஆகிய இரு ரேம் வேரியண்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் பெறுகிறது. இதில் சூப்பர் டால்பி அட்மாஸ் திறன்கொண்ட ஸ்னாப்டிராகன் சவுண்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக NFC சென்சாரும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

ஐக்யூ 9 ப்ரோ விலை

Legend, Dark Cruise ஆகிய இரு வண்ணத் தேர்வுகளின் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. விலையை பொருத்தவரை 8GB + 256GB வேரியண்டின் விலை ரூ.64,990ஆகவும், 12GB + 256GB வேரியண்டின் விலை ரூ.69,990ஆகவும் நிறுவன தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசான் ஷாப்பிங் தளத்திலும் இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

Intelligent டிஸ்ப்ளே சிப், Gimbal கேமரா உடன் வெளியான iQOO 9 ஸ்மார்ட்போன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.