Airtel வாடிக்கையாளர்கள் விரும்பும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்!

நாட்டில் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்தியது. எனினும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் டெலிகாம் நிறுவனங்கள் திட்டங்களை வகுத்து வருகிறது.

அந்த வகையில், 3ஜிபி டேட்டா பலன்களுடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை தங்கள் வசம் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், அதிவேக இணைய சேவை, ஏர்டெல் சேவைகளின் இலவச அணுகல்கள் ஆகியன பயனர்களுக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு கால அளவைக் கொண்டுள்ளது. இதில் உங்களுக்கான திட்டம் எது என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்தத் திட்டங்களில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video) 30 நாள்களுக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar Mobile) மொபைல் சந்தா, 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ், இலவச விங் மியூசிக் ஆகிய கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன.

ஏர்டெல் ரூ.599 ரீசார்ஜ் திட்டம் (airtel 599 plan hotstar)

இந்த திட்டம் 28 நாள்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 3ஜிபி வரம்பற்ற டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது. 3ஜிபி என்ற வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர்.

Vi Recharge: 3gb டேட்டா உடன் UnLimited திட்டங்கள்… இனி பயன்படுத்தாத டேட்டாவை சேமிக்கலாம்!

மேலும், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு 30 நாள்களுக்கும், ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும், Airtel Xstream Mobile சந்தா 28 நாள்களுக்கும், 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் (Fastag) ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் (Hellotunes), இலவச விங் மியூசிக் (Wynk Music) ஆகியன கூடுதல் இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.699 ரீசார்ஜ் திட்டம் (airtel 699 plan details)

ஏர்டெல்லின் ரூ.699 ரீசார்ஜ் திட்டம் 56 நாள்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 3ஜிபி வரம்பற்ற டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது. 3ஜிபி என்ற வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர்.

Jio ரீசார்ஜ்: அளவில்லா 3ஜிபி டேட்டா திட்டங்கள்… அள்ளித்தரும் ஜியோ!

மேலும், அமேசான் பிரைம் வீடியோ சந்தா 56 நாள்களுக்கும், ஏர்டெல் எக்ஸ்டிரீம் மொபைல் சந்தா 56 நாள்களுக்கும், 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் (Fastag) ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் (Hellotunes), இலவச விங் மியூசிக் (Wynk Music) ஆகிய கூடுதல் நன்மைகள் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.