Flagship அம்சங்கள் கொண்ட குறைந்த விலை Moto Edge 30 pro ஸ்மார்ட்போன் – விலை இதுதான்!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிவரவான
மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ
(Moto Edge 30 Pro) இந்தியாவில் நாளை (பிப்ரவரி 24)அறிமுகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான டீசரை Flipkart Shopping தளம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் வெளியான Moto Edge X30 ஸ்மார்ட்போனின் இந்திய பதிப்பு தான் மோட்டோ எட்ஜ் 30 என்பது தெரியவந்துள்ளது.

அந்த வகையில், இந்த பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், OLED திரை, 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா போன்ற அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும்.

Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?

மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ அம்சங்கள்

புதிய மோட்டோ போனில், 6.7″ அங்குல முழு அளவு எச்டி+ OLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 144Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 576Hz ஹெர்ட்ஸ் டச் சேம்பிளிங் ரேட், HDR10+ ஆகிய ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக்‌ஷிப் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான இயங்குதளம் ஸ்மார்ட்போனை இயக்குகிறது. எந்த விதமான Bloatware-ம் இதில் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும், 2 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் உத்தரவாதத்தை நிறுவனம் வழங்குகிறது.

Viral Video – 7ஆம் வகுப்பு மாணவனின் பிரமிக்க வைக்கும் கண்டுப்பிடிப்பு!

மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ கேமரா

இந்த ஸ்மார்ட்போன் கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் டிரிப்பிள் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உதவியுடன் 4K தரத்திலான படங்களை நாம் எடுக்க முடியும். இதில் தெளிவான படங்களை பிடிப்பதற்காக Telephoto லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

5G, NFC, ப்ளூடூத் 2.3, வைஃபை 6 போன்ற இணைப்பு ஆதரவுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும். 8ஜிபி, 12ஜிபி ஆகிய இரண்டு ரேம் வேரியண்டுகளில் மோட்டோ போன் அறிமுகம் ஆகிறது. மேலும், 128ஜிபி, 256ஜிபி ஆகிய இரு மெமரி தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது

வெளியாக தயாராகும் Apple மேக் கணினிகள்! உள்ளே என்ன சிப் இருக்கு தெரியுமா?

மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ விலை

மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 என்ற ஃபிளாக்ஷிப் சிப்செட்டைக் கொண்டிருக்கும் மிகவும் மலிவு ஸ்மார்ட்போனாக இருக்கும். இது சாம்சங் கேலக்ஸி S22 தொடருடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் அறிமுகமாகிறது. சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸின் ஆரம்ப விலை ரூ. 72,999 ஆக உள்ளது.

ஆனால், இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ போனில் தொடக்க விலை ரூ.55,999 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், Flipkart வழியாக இந்த புதிய மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 49,999 விலையில் விற்பனைக்கு வரலாம். இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு வங்கி சலுகைகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனவே, தள்ளுபடிகளுடன் இதன் தொடக்க விலை ரூ.44,999ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Read More:
இது போனா… இல்ல சினிமா கேமராவா… 40MP செல்பி, 2 டெலிபோட்டோ லென்ஸுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா!Asus Rog Phone 5: வாத்தி கம்மிங்… கேமிங் போன் ராஜா இஸ் பேக்…150Mbps broadband plans: 3.5TB வரை டேட்டா… OTT தளங்களின் சந்தாவும் இலவசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.