உக்ரைன் மீது போர் : ரஷியாவுக்கு எதிராக கால்பந்து போட்டியில் விளையாட போலந்து மறுப்பு

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின.  தொடர்ந்து இன்று 3-வது நாளாக போர் நீடிக்கிறது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் , உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது. 
போட்டியில் பங்கேற்பதற்காக வருகிற மார்ச் 24ம் தேதி போலந்து அணி ரஷியா செல்லவிருந்த நிலையில் , ரஷியாவுக்கு எதிராக விளையாட  போலந்து அணி மறுப்பு தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.