ஜனவரியில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 3.7% வளர்ச்சி..!

இந்தியாவின் 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை ஜனவரி மாதம் தாண்டியுள்ளது.

ஆனால் இந்த 8 முக்கியத் துறையின் உற்பத்தி அளவு டிசம்பர் மாதம் 4.1 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் ஜனவரி மாதம் 3.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய்

இந்தியாவில் தொடர்ந்து 50வது மாதமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்து வருகிறது. கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது 2.4 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் விவசாய உரத்தின் உற்பத்தி அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஜனவரி மாதம் 2 சதவீதம் சரிந்துள்ளது.

ஸ்டீல் உற்பத்தி

ஸ்டீல் உற்பத்தி

ஸ்டீல் உற்பத்தி டிசம்பர் மாதத்தில் 1 சதவீத சரிவு பாதையில் இருந்து தற்போது வளர்ச்சிப் பாதைக்கு மீண்டு உள்ளது, ஜனவரி மாதம் ஸ்டீல் உற்பத்தி 2.8% உயர்ந்துள்ளது. அதேவேளையில் இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியானது 2021 நவம்பரில் சரிவுக்குப் பிறகு, ஜனவரியில் 13.6 சதவீதம் என்ற தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது.

நிலக்கரி உற்பத்தி
 

நிலக்கரி உற்பத்தி

இதேபோல் ஜனவரி மாதம் நிலக்கரி உற்பத்தி 8.2 சதவீதம் வளர்ச்சி அடையும், இயற்கை எரிவாயு உற்பத்தி 11.7 சதவீதமும், பெட்ரோலியம் சுத்திகரிப்பு 3.7 சதவீதமும், மின்சார உற்பத்தி அளவீடு ஜனவரி மாதம் 0.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

3வது கொரோனா தொற்று அலைக்குப் பின்பு இந்தியாவின் 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் மந்தமான வளர்ச்சி பதிவு செய்தாலும், கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை அடைந்துள்ளது ‘சற்று ஊக்கமளிக்கிறது’ என ICRA தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகிறார்.

IIP குறியீடு

IIP குறியீடு

இதன் மூலம் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி அளவீடு டிசம்பர் 2021ல் 1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்படுகிறது. இதற்கு முன்பு IIP குறியீடு 0.4 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஐஐபி குறியீட்டில் 8 கோர் துறைகள் மட்டும் சுமார் 40.27 சதவீதமாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

January core sector growth moderates to 3.7% surpassed pre-pandemic level

January core sector growth moderates to 3.7% surpassed pre-pandemic level ஜனவரியில் 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி 3.7% வளர்ச்சி..!

Story first published: Monday, February 28, 2022, 23:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.