உக்ரைனுக்கு எதிராக மனித உடலை ஆவியாக்கும் vacuum bomb-ஐ பயன்படுத்தியதா ரஷ்யா?

ரஷ்யா உக்ரைன் இடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் நாளுக்கு நாள் புதிய திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது. 

தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின் படி, தங்கள் நாட்டு முக்கிய கட்டுமானங்களையும் மக்களையும் தாக்க, ரஷ்யா வேக்குவம் குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் திங்களன்று இதை தெரிவித்தார். 

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த பின்னர், அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா செய்தியாளர்களிடம் கூறுகையில், நடந்து வரும் மோதலில் ரஷ்யா வேக்குவம் வெடிகுண்டு எனப்படும் தெர்மோபரிக் ஆயுதத்தை பயன்படுத்தியதாகத் தெரிவித்தார்.

“அவர்கள் இன்று வேக்குவம் குண்டைப் பயன்படுத்தினார்கள். ரஷ்யா உக்ரைனில் ஏற்படுத்த முயற்சிக்கும் அழிவு பெரியது” என்று மார்க்கரோவா கூறினார்.

மேலும் படிக்க | ‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன் 

வேக்குவம் பாம் என்றால் என்ன?

இந்த ஆயுதம், சூழலில் உள்ள காற்றில் இருக்கும் அக்சிஜனை உறிஞ்சி அதிக வெப்பநிலை வெடிப்பை (ஹை டெம்பரேசர் எக்ஸ்பிளோஷன்) உருவாக்குகிறது. இது ஒரு வழக்கமான வெடிபொருளை விட நீண்ட கால வெடிப்பு அலையை உருவாக்குகிறது. மேலும், இது மனித உடலை ஆவியாக்கும் திறன் கொண்டது. 

2000 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையின்படி, ஃப்யூயல் ஏர் எக்ப்ளோசின்ஸ் (FAE) முதன்முதலில் வியட்நாமில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. சோவியத் விஞ்ஞானிகளும் FAE ஆயுதங்களை விரைவில் உருவாக்கி 1969 இல் சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்தினர்.

அப்போதிருந்து, இது குறித்து பல ஆராய்ச்சிகளும் மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ரஷ்யர்கள் பரந்த அளவிலான தர்ட் ஜெனரேஷன் FAE போர்க்கப்பல்களை வைத்திருப்பதாகத் தெரிகிறது.

உக்ரைனில் நடந்த மோதலில் இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. இந்த ஆயுதங்களுக்கு பல சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மாஸ்கோவின் உளவாளிகளுடன் தொடர்புடைய ரஷ்ய கூலிப்படையினர் சமீபத்திய வாரங்களில் உக்ரைனில் தங்கள் இருப்பை அதிகரித்துள்ளதாக மூன்று மூத்த மேற்கத்திய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை சில நேட்டோ உறுப்பினர்களிடையே அச்சத்தை தூண்டியுள்ளது. ரஷ்யா ஒரு பெரிய தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக நேட்டோ நாடுகளுக்கிடையே வலுவான சந்தேகம் உள்ளது. 

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: ‘மிருகத்தனமான’ கிளஸ்டர் வெடிபொருட்களை பயன்படுத்துகிறது ரஷ்யா – உக்ரைன் புகார் 

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.