நடிகர் விஷ்ணு வீட்டில் திருட்டு

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுவின் மகள் நடிகை லட்சுமி மன்சு, மகன்கள் நடிகர்கள் விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு உள்ளனர். தற்போது தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் விஷ்ணு மன்சு, தனது வீட்டில் கொள்ளை நடந்துள்ளதாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், தனது வீட்டில் மேக்கப் பொருட்கள் வைத்திருந்த பெட்டியை யாரோ திருடி விட்டதாகவும், அந்த பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.