வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90 சதவீதம் பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination-FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் 2021ஆம் ஆண்டு விதிகளின்படி, அயல்நாடுகளில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டால், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் 12 மாதங்கள் பயிற்சியும் பெற்றிருப்பது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல வெளி நாடுகளில் (அயல்நாடுகளில்) மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவில் பதிவு செய்ய, அதற்கான தகுதி தேர்வை எழுதி, புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டுமெனவும் விதி வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,
இந்திய மாணவர்கள்
பலரும் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படித்து மீண்டும் தாயகம் திரும்பி இங்கு அதற்கான தேர்வை எழுதி மருத்துவம் பார்த்து வருகிறார்கள், இதனிடையே,
உக்ரைன்
மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்தியில் அரசு ஈடுபட்டுள்ளது. உக்ரைனில் பெரும்பாலும் மாணவர்களே சிக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த மாணவர்கள் உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்றவர்கள்.

அதேசமயம், மீட்பு நடவடிக்கைகளைல் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக எதிர்க்கட்சிக்கள் விமர்சித்து வருகிறனர். முன் கூட்டியே எச்சரித்தும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து புறப்படுவதில் மெத்தனம் காட்டினர் என்று சமூக வலைதளங்களில் சில விமர்சித்து வருகின்றனர். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால்தான் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிகக் செல்வதாகவும், அவ்வாறு செல்பவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எனவும், அவர்களால் உடனடியாக விமான டிக்கெட் புக் செய்து வர முடியாது, உக்ரைன் கல்லூரிகளும் கடைசி வரை வகுப்பை நடத்தின எனவும் பல்வேறு வகையான கருத்துகள் சமூக வலைதளங்களில் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90 சதவீதம் பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination-FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.

அதேசமயம், மருத்துவம் பயில்வதற்காக இந்திய மாணவர்கள் ஏன் அதிகளவில் உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்று விவாதிக்க சரியான தருணம் இது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.