அதிர வைக்கும் யுத்தம்.. ஒரே ஒரு பெண்.. இதுதான் புடினின் "போர்க் குழு"!

உக்ரைன் மீதான ரஷ்யப் போர் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், படபடப்பையும் கொடுத்துள்ளது. அதிபர் புடின் வைத்துள்ள “டீம்” குறித்த பேச்சுதான் இப்போது எங்கு பார்த்தாலும் தீவிரமடைந்துள்ளது.

அந்தக் காலம் இப்போது கிடையாது. ஆள் பலம் படை பலத்தை வைத்து ஒரு நாட்டை முன்பெல்லாம் எளிதாக முடக்கி விட முடிந்தது. ஆனால் இப்போதெல்லாம் போர் தொடுக்கவே யோசிக்கும் காலம் இது. மீறி போர் தொடுக்க வேண்டும் என்றால் முதலில் தமது தரப்பில் ஏற்படும் நஷ்டங்களை யோசித்துப் பார்த்து விட்டுத்தான் போருக்கெல்லாம் போகவே வேண்டும்.

காரணம் உலகம் முன்பு போல இல்லை. போர் தொடுக்கும் நாடுகளுக்கு எதிராக உலகமே அணி திரண்டு நின்று விடும் காலத்தில் நாம் வாழ்கிறோம். சரமாரியான பொருளாதாரத் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒதுக்கி வைப்பார்கள், தடைகள் பல பாயும்.. இதையெல்லாம் சமாளிக்கும் திராணி இருந்தால் மட்டுமே போரைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இப்படி பல்வேறு கூட்டல் கழித்தல்களைப் போட்டுப் பார்த்த பிறகுதான், உக்ரைனுக்கு எதிரான போரில் குதித்துள்ளது ரஷ்யா. அதிபர் புடின் திடமான ஒரு டீமை வைத்துக் கொண்டுதான் இந்தப் போரை நடத்தி வருகிறார். அந்த டீமில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கில்லாடிகள். புடினின் டீம் குறித்த ஒரு பார்வை..

“இந்தாங்க டீ சாப்பிடுங்க.. அம்மாட்ட பேசுங்க”.. சரணடைந்த ரஷ்ய வீரர்.. அன்பைக் கொட்டிய உக்ரைன்!

செர்ஜி ஷோய்கு
– முன்னாள் ரஷ்ய கூட்டுப்படைத் தலைமைத் தளபதி, தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர். புடினின் நீண்ட கால விசுவாசி. மேற்கத்திய நாடுகளின் மிரட்டலிலிருந்து ரஷ்யாவைப் பாதுகாப்பவர். உக்ரைன் போரில் இவர்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார். புடினின் நிழல் போல கூடவே இருப்பவர். புடின் எங்கு சென்றாலும் இவரும் இருப்பார். புடின் சைபீரியாவில் பொழுது போக்க சென்றாலும் கூட இவரும் உடன் செல்வார். புடினுக்கு அடுத்து அதிபராகக் கூடியவர் என்றும் இவரைக் கூறுவதுண்டு.

2014ம் ஆண்டு ஷோய்கு தலைமையிலான படையினர்தான் கிரீமியாவைக் கைப்பற்றி ரஷ்யாவுடன் இணைக்க உதவினர். ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவராகவும் இருந்தவர் ஷோய்கு. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவ்லானிக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற வழக்கில் ஷோய்குவின் பெயரும் அடிபட்டது. அதேபோல 2018ம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து முன்னாள் ரஷ்ய ரகசிய உளவாளி செர்ஜிக்கும் அவரது மகளுக்கும் விஷம் செலுத்தி கொல்ல முயற்சி நடந்தது. அதிலும் ஷோய்குவின் பெயர் அடிபட்டது.

புடின் வெறும் ராணுவ தளபதி மட்டும் அல்ல, அமைச்சர் மட்டுமல்ல. ஆனால் புடினின் பல்வேறு கொள்கை முடிவுகளில் தொடர்புடையவர். ரஷ்யாவின் கொள்கைகளை வகுக்கும் முக்கிய இடத்தில் இருப்பவர் என்று சொல்கிறார்கள்.

“செசன்யா ஸ்டைல்” அட்டாக்.. புடின் போடும் புது பிளான்.. என்னாகப் போகுதோ உக்ரைன்!

வலெரி கெராசிமோவ்
– கூட்டுப்படைத் தலைமைத் தளபதி. உக்ரைன் போரில் நேரடிப் பங்கு வகிப்பவர். இவரது வழிகாட்டுதலின் பேரில்தான் ராணுவம் தற்போது செயல்பட்டு வருகிறது. ராணுவமே உக்ரைன் தாக்குதலில் பெரும் பங்கு வகிப்பதால் வலெரியின் பங்கும் கவனிப்புக்குரியதாக மாறியுள்ளது. இதற்கு முன்பு 1999ம் ஆண்டு நடந்த செசன்யா போரிலும் வலெரி முக்கியப் பங்கு வகித்தார். உக்ரைன் போரிலும் இவரே முக்கியப் பங்கு வகிக்கிறார்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவரது வாயிலிருந்து சிரிப்பை வாங்க முடியாது என்பார்கள். அந்த அளவுக்கு எப்போடும் கடுகடுத்த முகத்துடன் காணப்படுவார். கிரீமியாவை ரஷ்யா தன்னுடன் சேர்த்துக் கொண்ட சம்பவத்திலும் இவரது பங்கு முக்கியமானது.

ஆரம்பத்தில் இவர் மீது புடினுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் உக்ரைன் போரில் தற்போது ராணுவம் திணறி வருவதால் இவர் மீது புடின் அதிருப்தியுடன் இருப்பதாக சொல்கிறார்கள்.

ரஷ்ய விமானப்படை ஆக்ஷனில் “மிஸ்ஸிங்”.. அடக்கி வாசிக்கும் புடின்.. வேற லெவல் ஸ்கெட்ச்!

நிக்கோலாய் பட்ருஷேவ்
– பாதுகாப்புக் கவுன்சிலின் தலைமைச் செயலாளர். கழுகு போல செயல்படக் கூடியவர் என்று இவரை சொல்கிறார்கள். அத்தனை துல்லியமாக இருப்பாராம். கடந்த 70ம் ஆண்டிலிருந்து புடினுடன் இருக்கக் கூடிய நீண்ட கால விசுவாசிகளில் இவரும் முக்கியமானவர். இவரும், பாதுகாப்பு சேவைப் பிரிவு தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் மற்றும் வெளியுறவு புலனாய்வுத் தலைவர் செர்ஜி நரிஷ்கின் ஆகியோரும் சேரந்து புடினின் அசைக்க முடியாத நட்பு மற்றும் ஆலோசனைப் படையாக திகழ்கின்றனர்.

நிக்கலோாய் பழைய கேஜிபி ஆள். இதனால் புடினுடன் நல்ல நட்பும், நெருக்கமும் உண்டு. புடின் சொல்வதில் ஏதாவது சரியில்லாதது இருந்தால் அதைத் திருத்தும் அளவுக்கு உரிமை பெற்றவராம். ரஷ்யாவை உடைப்பதுதான் அமெரிக்காவின் குறிக்கோளாக உள்ளது. அதற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆவேசமாக பேசினாராம் நிக்கோலாய்.

வாய் தவறி உளறிய பிடன்.. “அயோ தப்பு தப்பு”.. கமலா கண்ணு எப்படி போகுது பாருங்க..!

அலெக்சாண்டர் போட்ர்னிகோவ் –
ரஷ்ய உளவுப் பிரிவான எப்எஸ்பியின் தலைவர் இவர். இவர் தரும் தகவல்களை அப்படியே நம்புவாராம் புடின். புடினுக்கு மிக மிக நெருக்கமான ஆள். கேஜிபியில் செயல்பட்டவர். இதனால்தான் புடினுக்கு நெருக்கமாக இருக்கிறார்.

இவர்கள் தவிர வெளிநாட்டு உளவுப் பிரிவு தலைவர் செர்ஜி நரிஷ்கின், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பெடரேஷன் கவுன்சில் தலைவர் வாலன்டினா மத்வியன்கோ, நேஷனல் கார்டு தலைவர் விக்டர் சோலடோவ் ஆகியோரும் புடினுக்கு மிக நெருக்கமான வட்டாரத்தில் உள்ளனர். போர் தொடர்பான அனைத்து ஆலோசனைகளிலும் இவர்கள்தான் முக்கியமான புள்ளிகள் ஆவர்.

இதுபோக பிரதமர் மிகயில் மிஷுஸ்டின், மாஸ்கோ மேயர் செர்ஜி சோபயனானின், கோடீஸ்வர சகோதரர்கள் போரிஸ் மற்றும் ஆர்காடி ராட்டன்பர்க் ஆகியோரும் உள்ளனர். இதில் போரிஸ் சகோதரர்கள், புடினின் இளம் பிராயத்து நண்பர்கள் ஆவர். இவர்கள்தான் ரஷ்யாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை பேரையும் வைத்துக் கொண்டுதான் உக்ரைனில் போர் புரிந்து வருகிறார் புடின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.