ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை; 100 பணியிடங்கள்; டிகிரி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

SIDBI recruitment 2022 for 100 Assistant Manager vacancies apply soon: வங்கி வேலை வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் டிகிரி முடித்திருந்தாலே ரூ.70000 சம்பளத்தில் உதவி மேலாளர் ஆகலாம். இந்த அருமையான வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India), உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 100 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

உதவி மேலாளர் (Assistant Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை : 100

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 04.03.2022 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். (Bachelors’ Degree in Law, OR Bachelors’ Degree in Engineering (Preferably Civil / Electrical / Mechanical) OR Master’s Degree in any discipline (Preferably from Commerce/Economics/Management subject) OR CA / CS / CWA / CFA OR Ph.D.)

சம்பளம்: தோராயமாக ரூ. 70,000

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1100 ஆகவும், SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.175 ஆகவும் உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

எழுத்துத் தேர்வு:

எழுத்துத் தேர்வு, இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (30), திறனறிதல் (40), கணிதம் (40), கணினி அறிவு (40), மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) (50) என மொத்தம் 160 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வு கொள்குறி வகை அடங்கிய வினாக்களாக ஆன்லைனில் நடைபெறும்.

இதையும் படியுங்கள்: TNSAMB; தமிழ்நாடு அரசு வேலை; 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!

அடுத்ததாக விரிவான விடையளித்தல் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.sidbi.in/en/careers/page/79 அல்லது https://ibpsonline.ibps.in/sidbiofeb22/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.03.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.sidbi.in/files/careers/SIDBI_Officers_General_Stream_English.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.