இது படுகொலை… ரஷ்யாவின் அடுத்த திட்டம் தொடர்பில் கொந்தளித்த ஜெலென்ஸ்கி


உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கசிந்த தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் இராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் ரஷ்ய துருப்புகள் குண்டுவீச்சுக்கு திட்டமிடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொதுமக்கள் அதிகம் குடியிருந்துவரும் இப்பகுதியில் ரஷ்யா குண்டுவீச்சுக்கு திட்டமிடுவது படுகொலைக்கு ஒப்பானது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி,
இந்த விவகாரம் தொடர்பில் எந்த உலகத் தலைவர்களும் இதுவரை கருத்து தெரிவிக்கைவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் அரசியல்வாதிகள் இது தொடர்பில் தங்கள் கருத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை மறைமுகமாக சாடிய ஜெலென்ஸ்கி, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் போதுமானதாக இல்லை என்றே வெளிவரும் தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உண்மையை ஒருபோதும் மறைத்து வைக்க முடியாது எனவும், ரஷ்ய துருப்புகளால் உக்ரைனில் முன்னெடுக்கப்படும் படுகொலைகளை மூடி மறைக்கவும் முடியாது என அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இந்த போரில் உக்ரைன் மக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுபவர்களை நாங்கள் கண்டிப்பாக தண்டிப்போம் என சூளுரைத்த ஜெலென்ஸ்கி,
எங்கள் நகரங்களின் மீதும் மக்கள் மீதும் குண்டு வீசும் அயோக்கியர்களை இனம் காண்போம் எனவும், யார் யார் ஏவுகணைகளை வீசுகிறார்கள், யார் ஆணையிடுகிறார்கள் என்பதையும் நாங்கள் கண்டுபிடிப்போம் என தெரிவித்துள்ளார்.

கல்லறையைத் தவிர இந்த பூமியில் எந்தப் பகுதியிலும் உங்களால் இனி நிம்மதியாக இருக்க முடியாது எனவும் ஜெலென்ஸ்கி கொந்தளித்துள்ளார்.
இர்பின் நகரைவிட்டு வெளியேற முயன்ற நால்வர் கொண்ட குடும்பம் ஒன்று ரஷ்ய துருப்புகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளது.
இதை நாங்கள் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டோம் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி காட்டமாக தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.