இப்படி ஒரு Asus போனா – Flipkart-இல் இன்று முதல் விற்பனை ஆரம்பம்!

Flipkart தளத்தில் Asus 8z ஸ்மார்ட்போன் இன்று (மார்ச் 7) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு கையில் வைத்து பயன்படுத்தும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு, அதாவது ரூ.2,150 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ரூ.14,800 வரை பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பயன்படுத்தி, பவர்புல்
ஆசஸ் 8 இசட்
ஸ்மார்ட்போனை பயனர்கள் வெறும் ரூ.26,000க்கு பெற முடியும்.

ஆசஸ் 8 இசட் ஸ்மார்ட்போனில் பிளாக்‌ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பாஸ்ட் போக்கஸ் கொண்ட சோனி கேமராக்கள் ஆகிய சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது.

டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம் – மார்ச் 3 புதிய OLED டிவிக்கள் அறிமுகம்!

ஆசஸ் 8 இசட் அம்சங்கள் (asus 8z specs)

Asus 8z ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் அட்ரினோ 660 கிராபிக்ஸ் எஞ்சின் ஆதரவாக உள்ளது. இதில் 5.9″ அங்குல முழு அளவு எச்டி+ HDR10+ சான்றிதழ் பெற்ற அமோலெட் டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 240Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட்டும் இதில் உள்ளது. முன்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பும், பின்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டு ஆசஸ் போன் இயக்கப்படுகிறது.

ஆசஸ் 8 இசட் கேமரா (asus 8z camera)

இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமராவை பொருத்தவரை, இரட்டை லென்ஸ் கொண்ட அமைப்புடன் உள்ளது. இதில் 64 மெகாபிக்சல் f1.8 Sony IMX686 OIS கேமராவும், 12 மெகாபிக்சல் Sony IMX363 அல்ட்ரா வைட் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் உதவியுடன் 8k தரத்திலான படங்களை எடுக்க முடியும். மேலும் 4K 60FPS Slow Motion வீடியோவும் இந்த கேமராவில் சாத்தியமாகும். செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கம் 12 மெகாபிக்சல் கேமரா, Sony IMX663 சென்சார், டுயல் பிக்சல் பாஸ்ட் ஆட்டோ போக்கஸ் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

ஆசஸ் 8 இசட் பேட்டரி (asus 8z battery)

இந்த ஸ்மார்ட்போனில் அதிக டென்சிட்டி கொண்ட 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 30W ஹைப்பர்சார்ஜ் அடாப்டர் வழங்கப்பட்டுள்ளது. டைப்-சி டூ டைப்-சி கேபிள் இதனுடன் வழங்கப்படுகிறது. குவால்காம் பாஸ்ட் சார்ஜ் ஆதரவும் இதற்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.

இரட்டை ஸ்டீரியொ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. ஒலி திறனை மேம்படுத்த DIRAC ஆடியோ டியூனிங் செய்யப்பட்டுள்ளது. குவால்காம் aptX, LDAC போன்ற மேம்பட்ட ஒலி, NFC போன்ற ஆதரவையும் ஆசஸ் 8 இசட் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

Asus Rog Phone 5S: இதுவரை எந்த போனிலும் இல்லாத அம்சம்… அதென்ன தெரியுமா!

ஆசஸ் 8 இசட் விலை (Asus 8z price in India)

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டுக்காக IP68 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 5ஜி ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR5 ரேம், 128ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முழுவதுமாக மெட்டல் பிரேம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

Horizon Silver, Obsidian black ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ.42,999ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்திலிருந்து, இந்த ஸ்மார்ட்போனை கூடுதல் தள்ளுபடி விலையில் பெற முடியும். இதன் விற்பனை இன்று முதல் தொடங்கியது. Flipkart Axis Bank Credit Card பயனர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி கிடைக்கிறது.

Read more:

Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா…புதிய iPhone SE 3 விலை இவ்வளவு தானசைலண்டாக அறிமுகமாகும் Nokia போன்கள் – விலையை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.