பக்கா கமர்ஷியல்… சமூக கருத்துள்ள படம்… திரையரங்குகளை தெறிக்க விடும் ‘எதற்கும் துணிந்தவன்’

Etharkum thuninthavan review in tamil: தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடித்துள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று முதல் (மார்ச் மாதம் 10-ந்தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில், நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்தியராஜ், சூரி, புகழ், சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை பல திரையரங்குகளில் திரையிடக் கூடாது என மறைமுக எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பிரச்சனைகள் ஓரளவு சுமூகமானது. இதனால், திட்டமிட்டப்படி படம் திரையிடப்பட்டு வருகிறது.

சூரரைப் போற்று, ஜெய்பீம் என கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த சூர்யா, இம்முறை மீண்டும் கமர்ஷியல் பக்கம் திரும்பி உள்ளார். சமூக கருத்துக்காக பொள்ளாச்சி சம்பவத்தையும் ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமரா பெண்களை எந்தளவில் சீரழிக்கிறது என்கிற கதையை கொடுத்திருக்கிறார்.

நடித்த சூர்யாவின் ரசிகர்கள் வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அசத்த திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இதேபோல் படத்திற்கு மற்ற மாநில திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்திற்கான முதல் காட்சி முடிவடைந்துள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

தற்போது ரசிகர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஒரு ரசிகர் “அஜித்க்கு ஒரு விநாயக் , விஜய்க்கு ஒரு ஜெக்தீஸ், சிம்புவிற்கு ஒரு கார்த்திக் மாதிரி சூர்யாவுக்கு இந்த கண்ணபிரான் அமையும்.” என்று கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகரோ “சூரியாவின் மற்றொரு பிளாக்பஸ்டர்” படம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு இணைய வாசி, “நல்ல கருத்துடன் நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு கமர்ஷியல் திரைப்படம். இடைவேளை & கிளைமாக்ஸ் மிரட்டல்… சூர்யாவின் நடிப்பு செம. இமானின் BGM மாஸ். இப்படித்தான் கமர்ஷியல் திரைப்படம் எழுதப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். முழு திருப்தி. கண்டிபாக பார்க்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு இணைய வாசி, “எதற்கும் துணிந்தவன்’ இடைவேளையின் போது அருமையான சண்டைக் காட்சி. டி.இம்மான் பிஜிஎம். சொல்லவே வேணாம்! இந்த #சூரியனாவை நான் ரொம்ப நாளாக மிஸ் பண்ணினேன்” என்று தெரிவித்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் படம் பற்றி ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ள ஒரு இணைய வாசி, “என் நேர்மையான விமர்சனம்… முதல் பாதி சூர்யா அண்ணா ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட். 2வது பாதி சூர்யா அண்ணா வெறுப்பாளர்களுக்கு ட்ரீட்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு இணைய வாசி, நல்ல சமூக செய்தியுடன் கூடிய பொழுதுபோக்கு மற்றும் ஈடுபாடு கொண்ட வெகுஜன கமர்ஷியல் திரைப்படம். சூர்யா தனது பயங்கர திரை பிரசன்ஸ் மூலம் அதிக ஸ்கோர் செய்துள்ளார். ரொமாண்டிக் டிராக் ஓகே. நல்ல BGM, குடும்பம் மற்றும் உணர்வு பகுதிகள்
ஆங்காங்கே சில க்ளிஷேக்கள்.. ஆக்‌ஷன் காட்சிகள். ஒட்டுமொத்தமாக, படதிற்கான மதிப்பெண் 7.5/10″ என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.