பாஜகவுக்கு பெண்கள் சமாஜ்வாதிக்கு ஆண்கள்: பாஜக தலைவர்!

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை பிடிக்க
பாஜக
, சமாஜ்வாடி,
காங்கிரஸ்
, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கணித்துள்ளது. அதன்படியே, அம்மாநிலத்தை ஆளும் பாஜக 250க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. சமாஜ்வாடி கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

அதேபோல், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் நிலையில், உள்ளது. அம்மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் அக்கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் முன்னிலை நிலவரம் குறித்து பேசிய மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்
சந்திரகாந்த் பாட்டில்
, “தேர்தல் முடிவுகளை குறித்து, ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக நான் கருத்து கூறமாட்டேன். ஆனால் இப்போதைய நிலவரம், பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்பதை காட்டுகிறது. அனைத்து பெண்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். ஆண்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவை தோற்கடிப்பது என்பது உங்கள் தலையை சுவற்றில் இடித்துக்கொள்வது போன்றது என்றும் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.