மீண்டும் சரிவை காணும் இந்திய ரூபாய்.. மீள வழியே இல்லையா?

உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பல அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது..

குறிப்பாக கச்சா எண்ணெய் விலையானது கடந்த வாரத்தில் மிக மோசமான ஏற்றத்தினை கண்டது. இது இந்திய போன்ற நாடுகளுக்கு மிக மோசமான விஷயமாகவும் பார்க்கப்பட்டது.

ஏனெனில் தனது மொத்த எண்ணெய் பயன்பாட்டில் பெருமளவில் இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது.இதன் காரணமாக வழக்கத்தினை விட கூடுதலாக எரிபொருளுக்காக செலவு செயும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் நெருக்கடி.. இந்தியா ஐடி துறைக்கு சாதகம் தான்.. எப்படி.. ஏன்..!

பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

இதற்கிடையில் பணவீக்கமானது ஏற்கனவே 6% அருகில் காணப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியினை காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எப்படியிருப்பினும் இன்று இந்திய சந்தையானது காலையில் சரிவில் தொடங்கினாலும், தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

தற்போதைய நிலவரம்?

தற்போதைய நிலவரம்?

இதற்கிடையில் இன்று காலை அமர்வில் 19 பைசா அதிகரித்து 76.25 ரூபாய் வரை அதிகரித்திருந்த ரூபாயின் மதிப்பானது, தற்போது (2.18 நிலவரப்படி) 76.59 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் 76.43 ரூபாயாக கடந்த அமர்வில் முடிவடைந்திருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 76.34 ரூபாயாகவும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
 

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

நேற்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சியே 4 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. பஞ்சாப்பில் மட்டும் பெரும்பான்மை தொகுதியை ஆம் ஆத்மி வென்றுள்ளது. இதுவும் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாக அமையலாம். இதற்கிடையில் தான் ரூபாயின் மதிப்பானது இன்று காலை நேரத்தில் சற்று ஏற்றம் கண்டு காணப்பட்டது.

நீடிக்கும் பதற்றம்

நீடிக்கும் பதற்றம்

எனினும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முன்னணி நாடாக இருக்கும் இந்தியா, உக்ரைன் ரஷ்யா இடையே நீடித்து வரும் பதற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தையில் சமாதானம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்காததால் சந்தையில் மீண்டும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

தற்போதைய சந்தை நிலவரம்?

தற்போதைய சந்தை நிலவரம்?

2.30 நிலவரப்படி, இந்திய சந்தையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது சென்செக்ஸ் 27.37 புள்ளிகள் அதிகரித்து, 55,491 புள்ளிகளாகவும், இதே 2.5 புள்ளிகள் குறைந்து, 16,592 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian rupee up from record low: but Today also fall to Rs.76.63 against dollar

Indian rupee up from record low: but Today also fall to Rs.76.63 against dollar/மீண்டும் மீண்டும் சரிவினைக் காணும் இந்திய ரூபாய்.. மீள வழியே இல்லையா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.