சாதி மோதல்கள் சமூகப் பிரச்சனையே; ரவுடிகளை அடையாளப் படுத்த கூடாது – ஸ்டாலின்

Stalin says communal dispute is a social issue: சாதி மோதல்களை சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள், அது சமூக ஒழுங்குப் பிரச்னை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் வன அலுவலர்கள் மாநாடு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதில் 3-ம் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்தி விடுவதாகவும் காவல் துறை இயக்குனர் சொன்னார். கட்டுப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். சாதி மோதல்களை சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள். அது சமூக ஒழுங்குப் பிரச்னை. இதுபோன்ற பிரச்சனைகளில் ஈடுபடும் இளைஞர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். ஆக்கப்பூர்வமான வழிகளில் விளையாட்டு போட்டிகள், ஊர்க்காவல் படைகள் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். கிராமங்களில் இந்த பிரச்சினை அதிகம் உருவாக்கி இருக்கிறது என்று போலீஸ் சூப்பிரண்டு இங்கே பேசும்போது சொன்னார். படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல, படித்து முடித்து விட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்கும் ஒரு சிலராலும் இது போன்ற மோதல்கள் உருவாகும் சூழ்நிலை உள்ளது என்று கூறினார்.

மேலும், சமூக வலைதளங்கள் மூலமாக நடக்கும் வன்மங்களுக்கு எந்தெந்த வகையில் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: கூட்டாட்சி முதல் கல்விக் கொள்கை வரை; ஆளுநர் – முதல்வர் மாறுப்பட்ட கருத்து

பின்னர், சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டு பதிவிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அவர்களை சாதி, மதம், அரசியல் என அடையாளபடுத்தக்கூடாது. ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை செய்வதும் தவறானது. ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது. குடிசைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அமைச்சர் சொன்னார், இது போன்ற அடையாளப்படுத்தல்கள் கூடாது. மராட்டிய மாநிலம் போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும். 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். குற்றங்களே இல்லாத சமூகத்தை உருவாக்குவதோடு, திட்டமிட்டு உருவாக்கப்படும்  மத மோதல்களை தடுக்க வேண்டும். மத மோதல் தடுப்பு பிரிவுகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும். குற்றம் புரிவோருக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது. கைதிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தும் யோசனையை செயல்படுத்தலாம். குற்றம் அதிகம் நடப்பதாக நினைக்க வேண்டாம். இப்போது தான் புகார்கள் அதிகமாக வருகின்றன” என்று அவர் கூறினார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.