துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.!

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

அல் பர்ஷா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடியின் முகப்பில் பற்றி தீ மளமளவென மேல் மாடி வரை  பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 14 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், தீ பற்றியதற்கான காரணம் குறித்து  விசாரித்து வருவதாகவும் துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.