வெஸ்ட்மெட் மருத்துவமனையில் | Dinamalar

புதுச்சேரி, : மகளிர் தினத்தை முன்னிட்டு, வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை 13ம் தேதி, மகளிருக்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, புதுப்பேட்டில் வெஸ்ட்மெட் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, மகளிர் தினத்தையொட்டி, மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை 13ம் தேதி நடக்கிறது.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ சீனியர் டாக்டர் லோபமுத்ரா, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கிறார்.முகாம் காலை 9:30 மணி முதல், பகல் 1:00 மணி வரை நடக்கும். முகாமில், மாதவிடாய் பிரச்னை, அதிக ரத்த போக்கு, வெள்ளைப்படுதல், தீராத பிறப்பு குழாய் எரிச்சல், அடி வயிற்றில் கட்டி, வலி, கர்ப்ப பை அடி இறங்குதல், கர்ப்ப பை, கர்ப்ப பை வாய் மற்றும் கருமுட்டை புற்றுநோய் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.முகாமில் பங்கேற்கும் பெண்களுக்கு, ரூ. 1200 மதிப்புள்ள வயிற்று ஸ்கேன் (அப்டாமினல்) இலவசமாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க 0413-2255755, 6385610111 தொலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.