ஒரு பங்கு விலை 3,83,48,154.88 ரூபாய்.. அடேங்கப்பா..!

இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருக்கும் MRF, ஹனிவெல் ஆட்டோமேஷன், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீ சிமெண்ட், 3எம் போன்ற விலை உயர்ந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் இருக்கும்.

ஆனால் அதிகப்படியான விலை காரணமாக ரீடைல் முதலீட்டாளர்கள் இத்தகைய விலை உயர்ந்த பங்குகளை வாங்குவது இல்லை, ஆனால் பெரும் முதலீட்டாளர்கள் கண்களை மூடிக்கொண்டு வாங்கும் சில பங்குகளில் இந்த விலை உயர்ந்த பங்குகளாக இருக்கிறது.

அந்த வகையில் ஒரு பங்கு விலை 3.83 கோடி ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?!

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ பங்கு.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் வாரன் பஃபெட் தலைமை வகிக்கும் பெர்க்ஷயர் ஹாத்வே இன்க் நிறுவனத்தின் பங்கு விலை திங்கள் கிழமை வர்த்தகத்தில் முதல் முறையாக 5,00,000 டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது. அதிகப்படியாக 5,01,939.20 டாலர் வரையில் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகள்

பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகள்

ரஷ்யா – உக்ரைன் போர், அதிகரித்து வரும் பணவீக்கம், அமெரிக்காவின் வட்டி விகித உயர்வை ஆகிய எதையும் பொருட்படுத்தாமல் வாரன் பஃபெட்-ன் பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகள் 5 லட்சம் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 3,83,48,154.88 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

விலை உயர்ந்த பங்கு
 

விலை உயர்ந்த பங்கு

அமெரிக்காவின் ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் 500 குறியீட்டை 2022ல் 12 சதவீதம் வரையில் சரிந்துள்ள நிலையில் வாரன் பஃபெட்-ன் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் கிளாஸ் ஏ பங்குகள் 2022 இல் 10% உயர்ந்துள்ளது. அமெரிக்காவிலேயே விலை உயர்ந்த பங்குகளாகப் பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகள் திகழ்கிறது. பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தைத் தொடர்ந்து விலை உயர்ந்த பங்குகளாக 4,770.00 டாலர் மதிப்பில் NVR இன்க் திகழ்கிறது.

6வது பெரிய நிறுவனம்

6வது பெரிய நிறுவனம்

அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் ஒமாஹா-வை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் சந்தை மதிப்புத் தோராயமாக 733.4 பில்லியன் டாலராக உள்ளது. இது அமெரிக்காவில் ஆறாவது அதிக மதிப்புடைய நிறுவனமாக விளங்குகிறது.

வாரன் பஃபெட் பங்கு இருப்பு

வாரன் பஃபெட் பங்கு இருப்பு

பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் வாரன் பஃபெட் சுமார் 16.2 சதவீத பங்குகள் வைத்துள்ளார். இதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 119.2 பில்லியன் டாலராக உயர்ந்து உலகின் ஐந்தாவது பணக்காரராக விளங்குகிறார்.

27.46 பில்லியன் டாலர் லாபம்

27.46 பில்லியன் டாலர் லாபம்

பெர்க்ஷயர் ஹாத்வே ஒரு ஹோல்டிங் நிறுவனமாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் பெர்க்ஷயர் ஹாத்வே சுமார் 27.46 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தை ஈட்டியுள்ளது. மேலும் இந்நிறுவனம் இண்டர்நெட் துறையில் துவங்கி ஆட்டோமொபைல், ரெஸ்டாரென்ட் என 10க்கும் அதிகமான துறையில் முதலீடு செய்து நிறுவனங்களின் பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

முக்கிய நிறுவனம்

முக்கிய நிறுவனம்

GEICO, டியூராசெல், டைய்ரி குவின், BNSF, பெர்க்ஷயர் ஹாத்வே எனர்ஜி, லூப்ரிசால், ப்ரூட் ஆப் தி லூம், ஹெல்பெர்க் டைமெண்ட், லாங் & பாஸ்டர், ப்லைட் சேப்ட்டி இண்டர்நேஷ்னல், ஷா இண்டஸ்ட்ரீஸ், Pampered Chef, Forest River, நெட் ஜெட்ஸ், NetJets, Pilot Flying J ஆகிய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

டாப் நிறுவனம்

டாப் நிறுவனம்

மேலும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள முக்கியமான நிறுவனங்களான கிராஃப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம் (26.7%), அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (18.8%), தி கோகோ-கோலா நிறுவனம் (9.32%), பாங்க் ஆஃப் அமெரிக்கா (11.9%), மற்றும் ஆப்பிள் (6.3%) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்கப் பங்குகள் பெர்க்ஷயர் ஹாத்வே வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Do you know Warren Buffett’s Berkshire Hathaway share price?

Do you know Warren Buffett’s Berkshire Hathaway share price? ஒரு பங்கு விலை 3,83,48,154.88 ரூபாய்.. அடேங்கப்பா..!

Story first published: Wednesday, March 16, 2022, 8:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.