“பல்கலை.யில் ஆளுநர் வேந்தராவதை தவிர்க்க மாநில அரசு சட்டமியற்ற வேண்டும்”- பாலகிருஷஷ்ணன்

“பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக நீடிப்பதை தவிர்த்து, கல்வித் துறை அமைச்சரே வேந்தராக நியமிக்க மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றுநாள் மாநில குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு விரோதமாக உள்ளது. ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கு;k இடையிலான முரண்பாடு பல மாநிலங்களில் உள்ளது. அதுமட்டுமன்றி ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக நியமிக்கப்படுவது பல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே `பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் நீடிக்க வேண்டியதில்லை; அதற்கு பதிலாக கல்வித்துறை அமைச்சரின் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்படலாம்’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
image
மேலும் பேசுகையில், `வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது’ என்று உயர்நீதிமன்ற உத்தரவினை சுட்டிக்காட்டிய பாலகிருஷ்ணன், “கால்நடைகளை காடுகளில் மேய்க்காமல் சென்னையிலா மேய்க்க முடியும்? நீர்நிலைகளை காக்க வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரில் நூறு ஆண்டுகால குடியிருப்புகளை அகற்றுவது ஏற்புடையதல்ல” என்றார்.
தொடர்ந்து ஹிஜாப் விவகாரம் குறித்து பேசுகையில், “நீதிபதிகள் அரசியல் சாசன விதிகளை மீறி உத்தரவை பிறப்பிக்கின்றனர். மத ரீதியான கொள்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்களில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில் அரசியல் தலையீடு உள்ளது. பணி ஓய்வு பெற்ற பிறகு கொளரவ பதவிகள் கிடைக்கும் என்ற அடிப்படையில் நீதிபதிகளின் செயல்பாடு உள்ளது” என்று பாலகிருஷ்ணன் பகிரங்கமாக குற்றசாட்டினார்.
சமீபத்திய செய்தி: பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் மான் இன்று பதவியேற்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.