வேண்டவே வேண்டாம் என்றார் விஜயகாந்த்… நான்தான் வலுக்கட்டாயமாக… இயக்குநரின் ஃபிளாஷ் பேக்!

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர்
விக்ரமன்
. புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தெடர்ந்து பெரும்புள்ளி, நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூர்ய வம்சம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

ப்பா… என்னா ஷைனிங்… சேலையில் ஆளே மாறிப்போன பிக்பாஸ் கேபி!

விக்ரமன் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும் குடும்ப சித்திரம். தனது படங்களின் மூலம் பல முன்னணி நடிகர்களுக்கு பிரேக்கை கொடுத்துள்ளார் இயக்குநர் விக்ரமன். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜயகாந்துடன் தான் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

வலிமை அவ்ளோலாம் வசூல் பண்ணலீங்க.. எல்லாம் பொய்.. பகீர் கிளப்பிய தயாரிப்பாளர்!

அதாவது விஜயகாந்தை வைத்து வானத்தைப்போல படத்தை இயக்கியிருந்தார் விக்ரமன். இந்தப் படத்தின் கதையை விஜயகாந்திடம் கூறிய போது அதில் சண்டை காட்சிகள் எதுவும் இல்லையாம். ஆனால் ஆக்ஷன் ஹீரோவான விஜயகாந்துக்கு சண்டைக் காட்சிகள் இல்லாமல் படம் கொடுப்பதா என்று யோசித்த விக்ரமன் படத்தில் சண்டை காட்சியை வைக்க முடிவு செய்தாராம்.

ஆனால் விஜயகாந்த், கதையில் எனக்காக எதையும் மாற்றாதீர்கள் எப்படி எடுக்க நினைதீர்களோ அப்படியே எடுங்கள் என்று கூறிவிட்டாராம். இருப்பினும் ஆக்ஷன் ஹீரோவுக்கு சண்டைக் காட்சி இல்லாமல் இருக்கக்கூடாது என க்ளைமேக்ஸில் சண்டைக்காட்சியை வைத்து முடித்தாராம் விக்ரமன். தனக்காக சண்டைக்காட்சியே வேண்டாம் என
விஜயகாந்த்
கூறியதை தற்போது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் இயக்குநர் விக்ரமன்.

எனக்கு நம்பிக்கையே இல்ல..என் மனச மாத்தீட்டாங்க – மதன் கார்க்கி Open Talk!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.