உலக அழகி பட்டத்தை வென்றார் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாஸ்கா| Dinamalar

லாஸ் ஏஞ்சல்ஸ்:போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாஸ்கா, 2021ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

கடந்த 2021ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி கடந்த டிசம்பரில் நடப்பதாக இருந்தது. போட்டியாளர்களில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து போட்டி ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, கரீபிய தீவு நாடான பியூர்டோ ரிகோவில் நடந்தது.

இதில் ஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்த, 23 வயதான கரோலினா பைலாஸ்கா, உலக அழகி பட்டத்தை வென்றார். கடந்த 2020ம் ஆண்டுக்கான அழகி பட்டத்தை வென்ற, கரீபிய தீவு நாடான ஜமைக்காவின் டோனி ஆன் சிங், அழகி பட்டத்துக்கான கிரீடத்தை அணிவித்தார்.

அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஸ்ரீ சயினி இரண்டாம் இடம் வென்றார். மேற்கு ஆப்ரிக்க நாடான கோட் டி ஐவோய்ரை சேர்ந்த ஒலிவியா ஏஸ் மூன்றாம் இடம் பெற்றார். இந்தியா சார்பில் போட்டியிட்ட மானஸா வாரணாசி, 11வது இடத்தை பிடித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.