அமைதி பேச்சுவார்த்தை அவ்வளவு ஈசியில்ல ப்ரோ…. உக்ரைன் அதிபருக்கு செக் வைத்த ரஷியா!

உக்ரைன் -ரஷியா இடையேயான போர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே பெலாரசில் இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட
அமைதி பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்தது.இந்த நிலையில் துருக்கியில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைனுக்கு ரஷியா முக்கிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தை தெளிவுபடுத்த வேண்டும் என உக்ரைனுக்கு ரஷியா வலியுறுத்தி உள்ளது.

சாத்தியமான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே, இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து பேச முடியும் என்று ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாக். அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பற்றிய தெளிவு கிடைத்த பின்புதான் இச்சந்தி்ப்பை நிகழ்த்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கிக்கு எதிராக.. 25 பேர் கொண்ட கும்பல்.. “குறி” தப்பியது.. பரபரக்கும் உக்ரைன்!

நாட்டில் உடனே அமைதி திரும்புவதற்காக ரஷிய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்த தயாராக இருப்பதாக
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
அண்மையில் கூறியிருந்தார். ரஷிய அதிபருடன் நேருக்கு நேர் சந்திப்பதன் மூலம் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தார். உக்ரைன் அதிபரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் லாவ்ரோவின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்திஜெலன்ஸ்கிக்கு எதிராக.. 25 பேர் கொண்ட கும்பல்.. “குறி” தப்பியது.. பரபரக்கும் உக்ரைன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.