ராம் சரண் பர்த்டேவுக்குக் கிடைத்த ‘ஒர்த் கிஃப்ட்’ – ஆர்ஆர்ஆர் 3 நாள் வசூல் இத்தனை கோடிகளா!

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூல் குறித்த அப்டேடைக் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப்பிறகு வெளியான ராஜமெளலியின் படம் என்பதால் இந்தியா முழுக்கவே ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு ஏகப்பட்ட ஹார்ட்டின்ஸ்களோடு காத்திருந்தார்கள் ரசிகர்கள். ஐந்து ஆண்டுகள் காத்திருப்புக்கான அத்தனை எதிர்பார்ப்புகளையும் ராஜமெளலி நிறைவேற்றியுள்ளார் என்பதை ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஹவுஸ்ஃபுல் காட்சிகளே சாட்சி. ராஜமெளலியைப் போலவே கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ‘ஆர்ஆர்ஆர்’ வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
குறிப்பாக, ராம் சரணுக்கு 2022 -ஆம் ஆண்டும் ‘ஆர்ஆர்ஆர்’ படமும் மறக்கவே முடியாத ஸ்பெஷல் மெமரீஸ்தான். நேற்று மார்ச் 28 ஆம் தேதி தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடியவருக்கு ‘ஆர்ஆர்ஆர்’ வெற்றியும் வசூலும் பர்த்டேவுக்குக் கிடைத்த ‘ஒர்த் கிஃப்ட்’டாகத்தான் இருந்திருக்கும். அப்படித்தான், அவரது ரசிகர்களும் பார்க்கிறார்கள்.
image

’பாகுபலி’ படத்தை பிரமாண்டங்களால் எப்படி பிரமாதப்படுத்தினாரோ, அப்படியே ‘ஆர்ஆர்ஆர்’ படத்தையும் ‘நாட்டு நாட்டு’ என்று பிச்சி உதறியிருக்கிறார் ராஜமெளலி. ஐந்தாண்டுகள் கொட்டிய உழைப்புக்கு மூன்றே நாளில் ரூ. 500 கோடி வசூலை அள்ளி எடுத்திருக்கிறார். படத்தின் பட்ஜெட் 500 கோடிதான். மூன்றே நாளில் ரூ.500 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அடுத்த மூன்று நாட்களில் இது ரூ.750 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

image

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்துள்ளனர். இதில், ராம ராஜு கதாபாத்திரத்தில் வரும் ராம் சரண் ராமராக உருவெடுத்து ஆங்கியேலருடன் போரிடுவதுபோல் படத்தில் காட்டப்பட்டுள்ளது விமர்சனங்களையும் அதேசமயம் வரவேற்பையும் பெற்றுள்ளது. சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். டிவிவி என்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.