"காங்கிரஸ் வலுப்பெற வேண்டுமென மனதார விரும்புகிறேன்"-நிதின் கட்கரி சொல்வதன் காரணம் இதுதான்!

காங்கிரஸ் கட்சி வலுவிழந்தால், பிராந்தியக் கட்சிகள் எதிர்க்கட்சி இடத்தைப் பிடிக்கும், இது ஒரு நல்ல அறிகுறி அல்ல என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

ஜனநாயகத்துக்கு வலுவான காங்கிரஸ் கட்சி அவசியம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி லோக்மத் பத்திரிகை விருது வழங்கும் விழாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
India's target is to become a manufacturing hub of construction equipments  in the world: Nitin Gadkari | Economy News | Zee News

இது தொடர்பாக பேசிய அவர், “ஜனநாயகம் இரண்டு சக்கரங்களில் இயங்குகிறது, ஒன்று ஆளும் ஆட்சி மற்றொன்று எதிர்க்கட்சி. எனவே நல்ல ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை. இதனால் காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது மனப்பூர்வமான விருப்பம். காங்கிரஸ் பலவீனமடைந்துள்ள நிலையில், அதன் இடத்தை மாநில கட்சிகள் பிடிக்கிறது. பிராந்தியக் கட்சிகள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என்று கூறினார்.

மேலும், “இதற்கு ஜவஹர்லால் நேரு ஒரு உதாரணம். மக்களவைத் தேர்தலில் அடல் பிஹாரி வாஜ்பாய் தோல்வியடைந்தபோது, ஜவஹர்லால் நேரு அவருக்கு மரியாதை அளித்தார். எனவே, ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் முழு மனதுடன் வாழ்த்துகிறேன். காங்கிரஸ் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் கட்சியில் நிலைத்திருந்து தங்கள் நம்பிக்கையை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும், தோல்வியைக் கண்டு விரக்தியடையாமல் இருக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டால் வெற்றியும் ஒரு நாள் உண்டு” என்று கூறினார்.
Nitin Gadkari to lay foundation stone for ₹1,406 crore projects tomorrow

“காங்கிரஸ்-முக்த் பாரத் (காங்கிரஸ் இல்லாத இந்தியா)” என்ற முழக்கத்தை பாஜகவின் பல உயர்மட்டத் தலைவர்கள் தேர்தல் பேரணிகளிலும், பிற மேடைகளிலும் பேசிவரும் நிலையில் நிதின் கட்கரியின் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.