ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு! டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும், நாளை முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம் என இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC)  நடத்தும் குரூப்-4 தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, இன்று மாலை    டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி  குரூப் 4  எழுத்துத்தேர்வு நடைபெறும் என தெரிவித்தார். தமிழக அரசில் மொத்தம் 7 ஆயிரத்து 382 காலிப்பணியிடங்கள் உள்ளது. 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள  7,382 பணியிடங் களில்  81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படும்.  இந்த 7,382 இடங்களை நிரப்ப ஜூலை 24ம் தேதி  குரூப் 4  எழுத்துத்தேர்வு நடைபெறும்.

குரூப்4 தேர்வுக்கு  நாளை முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,  ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை  தேர்வு நடைபெறும். குரூப்4 தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும், அவற்றில் ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் என்கிற அடிப்படையில் 300 மதிப்பெண்களுக்கு  கேள்விகள் கேட்கப்படும். தேர்வில் 300 மதிப்பெண்களில்  90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர் களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும்,  அக்டோபர் மாதம்  குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்.

தொடர்ந்து பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், TNPSC தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை. முறைகேடைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இந்தமுறை குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் மையங்களை இனிமேல் டிஎன்பிஎஸ்சியே தேர்வு செய்யும். 2019க்கு முன் தேர்வு மையம் விண்ணப்பத்தார் களால் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுளார்.

மேலும், இனி அனைத்து வித அரசு பணிகளுக்கும், TNPSC தான் தேர்வை நடத்தும் என்றும் அரசாணை வெளியிடப்பட்ட பின், வேறு யாரும் பணி நியமனம் மேற்கொள்ள முடியாது எனவும்  தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.