நாய், பூனை கறி சாப்பிடும் ரஷ்ய படையினர்? ; வீட்டு பிராணிகளுக்கு முகாம் அமைத்த தம்பதியினர்| Dinamalar

கார்கோவ்: போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக சென்றுள்ளதாக ஐ .நா., புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் உடமைகளை கொண்டு செல்லவே சிரமப்படும் போது பாசமாக வளர்த்த வீட்டு பிராணிகளை பிரிய மனமில்லாமல் பெரும் கவலைக்குள் சிக்கி உள்ளனர்.

இதனை கண்ட போலந்து நாட்டில் கார்கோவ் நகரில் தன்னார்வலர் தம்பதியினர் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கென ஒரு முகாம் அமைத்துள்ளார். இதில் அகதிகள் பிராணிகளை விட்டு செல்லலாம். இலவசமாக பத்திரமாக பார்த்து கொள்கின்றனர். அதிலும் ரஷ்யா படையினர் உணவு தட்டுப்பாடு காரணமாக நாய், பூனை, எலியை கொன்று சாப்பிட துவங்கி இருப்பதாகவும் பரவுகிற ஒரு தகவல் வீட்டு பிராணி வளர்ப்போரை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.

முகாமில் இதுவரை 100 பிராணிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் நாய், பூனை, குரங்கு, எலி, பல்லி, பாம்புகள் அடங்கும் என்கின்றனர் தன்னார்வலர்கள் லினாய்டு, வெலின்டினா. விலங்குகள் பெரும் துயரத்தில் இருப்பதை காண முடிகிறது. மனதை வாட்டுவதால் உதவி செய்யும் நோக்கில் இது தங்கும் வகையில் முகாம் அமைத்துள்ளோம். அவரவர் விலங்கினங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உரிமையாளர்களுக்கு போட்டோவும் அனுப்பி விடுகிறோம் என்கின்றனர் இந்த ஆர்வலர்கள்.

latest tamil news

இன்னும் பலர் தங்களின் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் போர் நடக்கும் பகுதியிலேயே பதுங்கி இருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.