இலங்கையுடன் இந்தியா 6 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது!

இலங்கை யாழ்ப்பாணம் அருகிலுள்ள மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கை மற்றும் இந்தியா கையெழுத்திட்டுள்ளன.

அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளுக்கு நவீன கணினி கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் பலகைகளை வழங்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்தியா இலங்கை இடையில் பயணிகள் படகு சேவை! உயர்நிலை பேச்சுவார்த்தை

இலங்கையில் சிறப்பு இலத்திரனியல் அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும்  கையெழுத்திடப்பட்டுள்ளது.

அத்துடன்,  கடல் பாதுகாப்பு தொடர்பு மத்திய நிலையங்களை அமைப்பதற்கு மற்றுமொரு புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், இலங்கையிலுள்ள மீனவ துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் வகையிலான உடன்படிக்கையொன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

மேலும், சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. 

மேலும், யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் ஐபிரிட் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

மேலும் படிக்க | இலங்கையில் கடும் நெருக்கடி; வங்கிகளின் வெளிநாடு நாணய இருப்பை கைப்பற்றும் அரசு

மேலும் படிக்க | பிரபாகரனால் முடியாததை ராஜபக்‌ஷே செய்துவிட்டார் – இலங்கை எம்.பி சர்ச்சை பேச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.