சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் பொறுப்பேற்பு

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலகத்தில் தனது அலுவலக பணிகளை தொடங்கினார்.

ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பிற்படுத்தப்பட்டோர் அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றப்பட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்படுவதாக ஆளுநர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தனது அலுவலக பணிகளை தொடங்கி, கோப்புகளில் கையெழுத்திட்டார். அவருக்கு போக்குவரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.