உக்ரைன் போர் நேரத்தில் இப்படியா? புடின் காதலியின் 19 வயது மகள் தொடர்பிலான ரகசியம் வெளியானது


விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என அறியப்படும் ஸ்விடியனா கிரிவோனோகிக் மகளின் புதிய பிரம்மாண்ட ரகசிய வீடு குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் உலகளவில் அதிகம் உச்சரிக்கும் பெயராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெயர் மாறியுள்ளது.

புடினின் ரகசிய காதலி

புடினின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் ரகசியமானது தான், அது தொடர்பில் அவ்வபோது புதிய தகவல்கள் கசியும்.
அந்த வகையில் பெரும் கோடீஸ்வரியும், புடினின் ரகசிய காதலி என கூறப்படும் ஸ்விடியனா கிரிவோனோகிக்கின் மகள் தொடர்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைன் மக்களுக்காக பொழிந்த பணமழை! சிதறி கிடந்த நோட்டுகள்… வைரலாகும் வீடியோ

அதன்படி லுய்சா ரொசோவா என்கிற எலிசவிடா (19) புடினின் 3வது மகள் ஆவார்.
இவர் புதிதாக பிரம்மாண்ட வீட்டை ரஷ்யாவின் St Petersburgல் வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த வீட்டின் மதிப்பு £1.7 மில்லியன் என கூறப்படுகிறது.
உணவு விநியோக ஆர்டரில் இருந்து ஹேக் செய்யப்பட்ட தரவுகள் மூலம் லுய்சா வீடு குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் “கோல்டன் டிரையாங்கிள்” முகவரியில் 4,306 சதுர அடி அபார்ட்மெண்ட்டாக இது உள்ளது.

மலைக்க வைக்கும் பிரம்மாண்டம்

ஜேர்மன் நிறுவனமான ஏங்கல் & வோல்கர்ஸின் கட்டுமானத்துடன் கூடிய “எலைட் அடுக்குமாடி குடியிருப்புகள்” வரிசையுடன் “கிளப் ஹவுஸ்” என்று இந்த வீடு விவரிக்கப்படுகிறது,
நீச்சல் குளங்கள் மற்றும் பல சொகுசு வசதிகளை இந்த வீடானது கொண்டுள்ளது.

உக்ரைன் மீது போர் தாக்குதல் நடக்கும் நேரத்தில் புடின் மூலம் இந்த வீடு வாங்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை பார்த்த பலரும் உக்ரைனில் புடின் செயலால் தான் தாக்குதல் நடக்கிறது, ஆனால் இது போன்ற நேரத்தில் இவ்வாறான புதிய சொகுசு வீட்டில் அவர் மகள் கொண்டாட்ட வாழ்க்கை மேற்கொள்கிறாரே என விமர்சித்துள்ளனர்.

இதனிடையில் இன்ஸ்டாகிராமில் எப்போதும் லுய்சா ஆக்டிவாக இருப்பார். ஆனால் உக்ரைனில் ரஷ்ய போர் தீவிரமான நிலையில் அது குறித்து பலரும் அவரை விமர்சித்தனர்.
இதையடுத்து தனது சமூகவலைதள பக்கத்தை அவர் மூடியது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.