என்னோட ஆட்டியூட் அவருக்கு பிடிச்சுப்போச்சு… இயக்குநர் பாலா குறித்து மனம் திறந்த நடிகை!

தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை
கிரித்தி ஷெட்டி
. தெலுங்கில் உப்பெனா படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் தி வாரியர் படத்தில் நடித்து வருகிறார் கிரித்தி ஷெட்டி. இந்தப் படத்தில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குநர் பாலா- நடிகர்
சூர்யா
கூட்டணியில் உருவாகும்
சூர்யா 41
படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் கிரித்தி ஷெட்டி. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கிரித்தி ஷெட்டி, சூர்யா 41 படத்தில் கமிட்டானது எப்படி என மனம் திறந்துள்ளார்.

அதாவது கிரித்தி ஷெட்டியின் போட்டோக்களில் ஒன்றை பார்த்துள்ளார்
இயக்குநர் பாலா
. அதில் அவர் காட்டிய ஆட்டியூட் பாலாவுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். பின்னர் நேரில் அழைத்து சந்தித்துள்ளார் பாலா. அதனை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக சூர்யா 41 படத்தில் புக் செய்து விட்டாராம்.

Dhanush:மாமியாருக்கே விபூதி அடிக்கும் தனுஷ்… வேற லெவல் டெக்னிக்!

பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தனக்கு பெரும் மகிழ்ச்சி என்று கூறியுள்ள கிரித்தி ஷெட்டி, அவரது படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் எதார்த்தமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் தான் சூர்யாவின் தீவிர ரசிகை என்றும் சூர்யா தனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் என்றும் கூறிள்ளார்.

அடுத்த செய்திநானும் வருவேன்: தனுஷை முன்னாடி விட்டு பின்னாடியே கிளம்பிய ஐஸ்வர்யா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.