"தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் எம்ஜிஆருக்கு அவமதிப்பு" – ஓபிஎஸ் கண்டனம்

திமுக அரசு விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரை அவமதித்துள்ளதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மத்திய சதுக்கத்திட்ட தொடக்க விழா குறித்து நாளிதழில் வெளியான அரசு விளம்பரங்களை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், “அதில் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று உள்ளது. ஆனால், அந்த இடத்திற்கு  ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்றுதான் பெயர். இதில் புரட்சித்தலைவர் என்ற சொற்கள் வேண்டுமென்றே  விடுபட்டுள்ளது. இது திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு
image

மறைந்த தி.மு.க. தலைவர் பெயரை “கலைஞர்” என்ற அடைமொழியோடு குறிப்பிடுகின்ற நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததற்கு மூல காரணமானவரும், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி மாபெரும் மக்கள் புரட்சி செய்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குள்ள அடைமொழியான “புரட்சித் தலைவர்” என்ற வார்த்தைகள் விடுபட்டு இருப்பது புரட்சித் தலைவரை அவமானப்படுத்தும் செயலாகும். அரசின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இனியாவது விளம்பரங்களில் புரட்சித் தலைவர் என்ற பெயர் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.