லக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டம்- சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்

மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
சென்னை அணியில், 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நியூசிலாந்தின் மில்னே, கான்வே, சான்ட்னர் ஆகியோர் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதில், சவுத்ரி, மொயீன் அலி, பிரிட்டோரியஸ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். 
அணிகள் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா,  மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்.எஸ்.டோனி,  ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), டுவைன் பிரிட்டோரியஸ், ஷிவம் துபே, டுவைன் பிராவோ, முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:  கே.எல்.ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (கீப்பர்), எவின் லூயிஸ், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, குருணால் பாண்டியா, ஆண்ட்ரூ டை, துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய்,  அவேஷ் கான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.