"இந்தியாவுடனான பிரச்சினைகள்".. பாக். ராணுவத் தளபதிக்கு என்னாச்சு?.. "நாதஸ்" திருந்திட்டாரா!!

இந்தியாவுடன் உள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று
பாகிஸ்தான் ராணுவத் தளபதி
குவாமர் பாஜ்வா கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் அரசியல் நிலவரம் சரியில்லை. பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விட்டது. நாடாளுமன்றத்தில் நாளை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நம்பிக்கை இல்லாத் தீர்மான விவகாரத்தில் பிரதமருக்கு ஆதரவாக ராணுவம் இல்லை என்று கூறப்படுகிறது. இம்ரான் கானும் ராணுவத்தை கண்டு கொள்வதாக இல்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையே மெளன யுத்தம் நடந்து வருகிறது.

என்னைக் கொல்லப் போறாங்க.. விடாமல் போராடுவேன்.. இம்ரான் கான் அலறல்!

இந்த நிலையில் ராணுவத் தளபதி
குவாமர் பாஜ்வா
அரசியல்வாதி போல பேசியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் கூறுகையில், இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமாகவே அமைதியான தீர்வு காணப்பட வேண்டும். காஷ்மீர் உள்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சின் மூலமாகவே தீர்வு காண முடியும் என
பாகிஸ்தான்
நம்புகிறது.

உலகின் எல்லாப் பகுதியிலும் ஏதாவது ஒரு மோதல், போர் நடந்து கொண்டு உள்ளது. ஆனால் இந் தீயின் நாவுகள் இப்பகுதியை தீண்டி விடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலமாக எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்பதை பாகிஸ்தான் நம்புகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கும் இது பொருந்தும்.

“ஒருங்கிணைவோம் வா”.. பாஜகவுக்கு எதிராக.. டெல்லியில் நின்று ஸ்டாலின் அறைகூவல்!

இந்தியா
சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையும் எங்களுக்குக் கவலை அளிக்கிறது. இந்தப் பிரச்சினை சுமூகமான முறையில் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தங்களது உணர்வுப்பூர்வமான நிலைப்பாட்டை விட்டு விட்டு அமைதி, வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இப்பிராந்திய பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தலைவர்கள் முன்வர வேண்டிய நேரம் இது என்றார் பாஜ்வா.

பாகிஸ்தானில் அரசியல் நிலவரம் கலவரமாகி வரும் நிலையில்
காஷ்மீர் பிரச்சினை
குறித்து பாஜ்வா பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து இம்ரான் கான் பேசியிருந்த நிலையில், இந்தியாவுடன் அமைதி வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க தான் விரும்புவதாக ராணுவத் தளபதி பேசியிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அடுத்த செய்திஎன்னைக் கொல்லப் போறாங்க.. விடாமல் போராடுவேன்.. இம்ரான் கான் அலறல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.