உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தொழுகை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று ( ஞாயிறு முதல்) ரமலான் நோன்பை துவக்கினர். இந்தியா , பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி , ஈரான், ஈராக், ஆப்கன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்காக குவிந்தனர். பல பகுதிகளில் இப்தார் விருந்து வழங்கப்பட்டது. மே.3ம் தேதி ரமலான் கொண்டாடப்படுகிறது.

latest tamil news

இஸ்லாமியர்கள், ரமலான் மாதத்தில், 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம்.மாண்புமிக்க நபிகள் நாயகம், ரமலான் மாதத்தை ‘ஷஹ்ரே அஜீம்’ என்றும், ‘ஷஹ்ரே முபாரக்’ என்றும் குறிப்பிட்டார். இதற்கு ‘கண்ணியம் நிறைந்த அல்லது அருள் வளம் நிறைந்த மாதம்’ என்று பொருள். இந்த மாதத்தின் பெருமையை அளவிட வார்த்தைகள் இல்லை. இந்த மாதத்தில் நோன்பிருப்பவர்கள் அடையும் பலன் பற்றி நாயகம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

latest tamil news

இந்த மாதத்தின் எல்லா நாட்களுமே புனித நாட்கள் தான். எல்லா இரவுகளுமே புனிதமான இரவு தான் என்று குறிப்பிடுவோர் உண்டு. நமது தேவைகளை மறக்க பயிற்சியளிக்கும் மாதம் ரமலான். இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படியும் உணர்வை அளிப்பது இந்த புனிதமாதம். இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பதற்காக பசி தாங்கி இம்மாதத்தில் நோன்பிருக்கிறோம். பசியின் கொடுமையை உணர்ந்தால் தான், பிறர் பசி தீர்க்க முடியும் என்ற எண்ணத்தை அருளும் ஒப்பரிய மாதம் இது. ‘ரமல்’ என்றால் ‘கரித்தல்’. நம் பாவங்களை நோன்பிருந்து சுட்டுப் பொசுக்கும் நல்வாய்ப்பு மிக்க மாதம் இது. இந்த மாதத்தில் நோன்பிருப்பவரின் முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

இன்றைய ரமலான் சிந்தனைகள்

பெருமை மிக்க மாதம்

ரம்ஜான் மாதத்தை கண்ணியம் நிறைந்த மாதம் என சொல்கிறார் நபிகள் நாயகம். இந்த மாதத்தின் பெருமையை அளவிட வார்த்தைகள் இல்லை. இந்த மாதத்தில் தான் ‘லைலத்துல் கத்ர்’ என்னும் மகத்தான இரவு வருகிறது. இந்த நாளில் தான் குர்ஆன் என்னும் வேதம் இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது. நமது தேவைகளை மறக்க பயிற்சியளிக்கும் மாதம் ரம்ஜான். இந்த புனித மாதத்தில், இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பதற்காக நோன்பிருக்க வேண்டும்.

latest tamil news

‘ரமல்’ என்றால் ‘கரித்தல்’. ஆம்…பாவங்களை நோன்பிருந்து சுட்டுப் பொசுக்கும் நல்வாய்ப்பு மிக்க மாதம். இந்த மாதத்தில் நோன்பிருப்பவரின் முந்தைய, பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். எனவே ஆனந்தமாக நோன்பு துவங்குவோம்.

latest tamil news

இன்று (ஏப்.3) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை (ஏப்.4) நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.