ஹிஜாப் தீர்ப்பு முஸ்லீம் பெண்களை மேலும் விளிம்பிற்கு மட்டுமே தள்ளும்

தொடர்ந்து கொண்டிருக்கும் ஹிஜாப் சர்ச்சை – அரசும் அதன் அமைப்புகளும் சமமான பங்கேற்புடன் – கூடிய ஒரு உருவாக்கப்பட்ட நிகழ்வான இது, இந்து பெரும்பான்மை மற்றும் முஸ்லிம் தேசிய சிறுபான்மையினருக்கு இடையே ஆழமான கலாச்சார பதட்டங்களை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. முஸ்லீம் பெண்களை “மீட்பதற்கான” வாதிடும் உரிமை அணுகுமுறையை கொண்டதான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஹிஜாப் “இஸ்லாத்தில் இன்றியமையாத மத நடைமுறை” அல்ல என்பதாக இருந்தது. இவ்வாறான செய்கையில் ​​நீதிமன்றமானது ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு யோசனைகளைப் புறக்கணித்தது: முதலாவதாக, சுதந்திர வேட்கைக்கான மனிதர்களின் முதன்மையான தூண்டுதல் (அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது), இரண்டாவதாக, இந்த சுதந்திரமானது மாறக்கூடிய தன்மையில் இருந்து, இஸ்லாமின் நடைமுறைகளில் இருந்து, அதன் சொந்த தீர்ப்பில் மறைமுகமாக உள்ள ஒரு புள்ளியில் உணரப்படலாம். முக்காடு அணியாததற்கான தண்டனையை மதம் அனுமதிக்கவில்லை எனும்போது, ஹிஜாப் அணியும் இளம் தலைமுறை முஸ்லிம் பெண்கள் கல்வியைத் தொடர்வதைத் தடுப்பதில் மாநில அரசு ஏன் உறுதியாக உள்ளது?

ஹிஜாப் அணியும் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்களுக்கு எதிராக அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டினால், அது நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றில் “வரலாற்று பாதகத்தின்” புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும். இந்தியாவின் உலகளாவிய அபிலாஷைகள் மற்றும் சர்வதேச அளவில் ஒத்துழைப்பைப் பின்தொடர்வது மற்றும் உள்நாட்டில் சமத்துவமின்மைக்கு ஒரு நிலையான சரிவு ஆகியவற்றுக்கு இடையே முரண்பாடு என்பது வெளிப்படையான அதிருப்தியாக இருக்கிறது.
.
நாட்டில் மிகப் பெரிய அளவில் இருக்கும் சிறுபான்மையினரை நோக்கிய படிப்படியாக நிகழும் மோசமான உணர்வானது, அரசும், அதன் அமைப்புகளும் சமூகத்தை திட்டமிட்ட முறையில் வலுவிழக்கச் செய்வதற்கான பாதையில் இருப்பதாகத் தெரிகிறது. இதனை, தாராளவாத பெண்ணிய அரசியலின் தோல்வி மற்றும் ஹிஜாபை “அதிகரிக்கும் அரபுமயமாக்கல்” மற்றும் “அடக்குமுறை கருவியின்” தோல்வியின் வீழ்ச்சி என்று விவாதிக்கலாம்

இந்த பக்கச்சார்பான மற்றும் தவறான தாராளவாத மதச்சார்பற்ற பெண்ணியவாதிகளின் பார்வை ஒரு விரும்பத்தகாத “மற்றவர்களின்” உருவத்தை உருவாக்க வழிவகுத்தது.
இது தாராளவாதம், பழமைவாதம் என்ற இரண்டையும் பின்பற்றும் இஸ்லாமியம் மற்றும் அதனை பின்பற்றுபவர்களை இறுக்கமாக்கியது. தாராளவாதிகள் மற்றும் பழமைவாதிகளின் இந்த புராண வகைகளே, இந்து எதேச்சாதிகாரம் உயர்ந்து வரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிந்தையவர்களை எளிதான இலக்காக ஆக்கியுள்ளது.

இந்தியாவில் மதச்சார்பின்மை பின்னடைவு என்பது விரும்பத்தகாத “மற்றவர்” – ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண் – தவிர்க்க முடியாத வகையில் விரோத உணர்வு மற்றும் “காப்பாற்றுபவரின் மனப்போக்கு” ஆகியவற்றின் மீதான தாராளவாத பார்வையில் உள்ளது

உண்மையில், ஹிஜாப் அதன் நேரடி அர்த்தத்தில் (ஒரு “பிரித்தல்”) இந்திய சமுதாயத்தில் ஒரு சுவராக அல்லது துண்டிக்கப்பட்ட ஒரு ஊடகமாக , தூரமாக அதன் பின்னர் அந்நியப்படுத்துவதாக வாழ்ந்து வருகிறது, “முஸ்லிம் மற்றும் முஸ்லீம் அல்லாத சமூகங்களுக்கு இடையிலான வேறுபாட்டின் மைய அச்சாக” (லீலா அஹ்மத், 1992), ஹிஜாப் “பின்தங்கிய நிலையின்” உலகளாவிய குறியீடாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்து உரிமைகளின் வெட்கக்கேடான மீறல் மற்றும் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளை குற்றமாக்குவதை விமர்சிப்பதிலும், [முஸ்லீம்] உடல்களை கண்காணிக்கவும் “நவீனத்துவம்” என்ற கருத்தை திணிக்கவும் தாராளவாத அரசியலுக்கு பொறுப்பு ஏற்கவும் வேண்டும். ஆணாதிக்கத்தின் கட்டமைப்பு, பல தசாப்தங்களாக இணக்கம் அல்லது வற்புறுத்தல் மூலம் “அடக்கத்தை” திணித்துள்ள முஸ்லீம் சமூகங்களுக்குள் செயல்படுவதை நான் கவனிக்க விரும்பவில்லை.

இரண்டு வகையான ஆணாதிக்கத்தை உள்ளடக்கிய “நவீனத்துவம்” மற்றும் “அடக்கம்” ஆகியவற்றுக்கு இடையேயான இந்த போட்டியில் வெவ்வேறான காலங்களிலும் சூழல்களிலும் முக்காடு என்பதன் பொருள் மாறிய வரலாறு- அதிகாரம், சித்தாந்தம் மற்றும் அடையாளத்தின் சின்னமாக, ஒரு பண்டமாக
ஆசை எனும் முதலாளித்துவ உற்பத்தியாக வலுவூட்டும் மற்றும் காணக்கூடிய /கண்ணுக்கு தெரியாத பெண் உடலுக்கான உருவகத்தை இழந்தது விட்டோம்.

மேலும், ஆடை மற்றும் சாதாரணமான துர்ப்பாக்கிய சங்கடங்கள் மீதான துருவமுனைக்கும் அரசியல் – நடைமுறையை மாற்றுவது அல்லது தொடருவது – முஸ்லிம் அமைப்புகள் வகைப்படுத்தப்பட்டிருப்பதை மறுத்தல், முஸ்லீம் பெண்கள் முகமையை நிராகரித்தல் மற்றும் தேசிய அளவில் உள்ள மற்றும் குடியேறிய.சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் மற்றும் அதிகாரமளிக்கும் பொறுப்பில் இருந்து அரசை விடுவிக்கிறது.

ஹிஜாபின் மாறுபட்ட வரலாறு, எந்த ஒரு முஸ்லீம் சமூகத்திலும் அரசியல் மாற்றம் பாலின கட்டுமானம் ஆகியவற்றுக்கு இடையே கட்டியெழுப்புவதற்கும் உள்ள உறவை சுட்டிக்காட்டுகிறது. பெண்கள் அமைப்புகள் அரசியல் மாற்றத்தின் தளங்களாக இருந்து வருகின்றன – பெண்களின் உடைகளில் மாற்றம் அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

முக்காடு போடும் நடைமுறையை தப்பெண்ணத்துடன் பார்ப்பது, அதன் மாற்று வரலாறுகளின் நம்பிக்கையை கொள்ளையடிப்பது மற்றும் நுட்பமான அல்லது அப்பட்டமான இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடாகும். ஹிஜாப் உரிமைக்கான குரலுடனோ அத்தகைய குரல் இல்லாமலோ பெண்கள் உரிமைகள் இயக்கமானது, இந்தியா போன்ற சமகால முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட, முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை சமூகங்களின் கண்ணியம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான பெரிய அரசியல் போராட்டத்தின் ஒரு நியாயமான பகுதியாகும்.

இந்தியாவில் தான் ஆடை அரசியல் அதன் நிலையை எட்டியுள்ளது. இது CAA எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கியது, அங்கு (முஸ்லீம்) எதிர்ப்பாளர்கள் “அவர்களின் ஆடைகளால் அடையாளம் காணப்படுபவர்களாக இருந்தார்கள்” மற்றும் இப்போதைய நிகழ்வுகளில் முஸ்லீம் பெண்கள் தங்கள் ஹிஜாபை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பாரபட்சமான வெளிப்புற நடத்தை (அரசு மற்றும் சமூகத்தின்) முஸ்லிம் சமூகத்தினரிடம் நீண்டகால விளைவுகளுடன் கூடியதாக மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுவதாக இருக்கலாம்.

முஸ்லீம்களிடையே கூட்டு மனவேதனைகள் உருவாகி,அது கூட்டு நினைவாக மாறும்போது, கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கும் வகையில் இந்திய அரசு இருக்க வேண்டும். மாறாக ஒடுக்குமுறையாளராக இருக்கக் கூடாது. இப்போது ஹிஜாப் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு காத்திருக்கிறது, முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சத்தின் உலகளாவிய அலைக்கு மத்தியில் சமூக பன்முகத்தன்மையின் நீண்ட பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அரசு வெற்றிபெறுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்த கட்டுரை முதன்முதலில் அச்சுப் பதிப்பில் மார்ச் 29ம் தேதியன்று ‘முக்காடு மற்றும் தப்பெண்ணம்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. கட்டுரையாளர் OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் & கல்வி விவகாரங்களுக்கான உதவி முதல்வராக (இளநிலைப் படிப்புகள்) இருக்கிறார்.

– தமிழில்; ரமணி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.